கோபா அமெரிக்க கால்பந்து தொடர்: பராகுவேவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற பிரேசில்

பிரேசில் அணி 4-1 என்ற கோல் கணக்கில் பராகுவேவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

நெவாடா,

உலகக் கோப்பை, யூரோ கோப்பை கால்பந்து தொடருக்கு அடுத்து புகழ்பெற்ற கோபா அமெரிக்க கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் கடந்த 1916-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடர் வரும் ஜூலை 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த தொடரில் நெவாடாவில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் பிரேசில் – பராகுவே அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரேசில் அணி முதல் பாதியில் 3 கோல்களை அடித்து அசத்தியது. பராகுவே அணி பதிலுக்கு 1 கோல் திருப்பியது.

இதையடுத்து முதல் பாதி ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் பிரேசில் அணி மேலும் ஒரு கோல் அடித்தது. இறுதியில் ஆட்ட நேர முடிவில் பிரேசில் அணி 4-1 என்ற கோல் கணக்கில் பராகுவேவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Related posts

மகளிர் டி20 உலகக்கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு

மகளிர் டி20 கிரிக்கெட்; லிட்ச்பீல்ட் அபாரம்… நியூசிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா

சச்சினின் மாபெரும் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்த விராட் கோலி