கோலாகலமாக நடந்த அனந்த் – ராதிகா திருமணம்!

Anant – Radhika Wedding : புன்னகையுடன் அரங்கிற்கு வந்த மணமகன் அனந்த் அம்பானி – வரவேற்று மகிழ்ந்த நீடா அம்பானி!

மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் அனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்டுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. முன்னதாக, அரங்கிற்கு வந்த அனந்த் அம்பானி பிரமாண்டமான இளஞ்சிவப்பு நிற ஆடையை அணிந்திருந்தார். அப்போது அவருக்கு பின்னால் அவரது நண்பர்கள் சிவப்பு நிறத்தில் ஜொலிக்கும் ஆடைகளை அணிந்து வந்தனர். அப்போது அவரை தந்தை முகேஷ் அம்பானி, சித்தப்பா அனில் அம்பானி ஆகியோர் வரவேற்றனர். அத்துடன், நீடா அம்பானி, ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோகா மேத்தா ஆகியோரும் புன்னகையுடன் வரவேற்று மகிழ்ந்தனர்.

விளம்பரம்

அனந்த் அம்பானி அரங்கிற்குள் நுழைந்தபோது, பக்தி இசை மணம் பரப்பிக் கொண்டிருந்தது. அனந்த் அம்பானி மேடையை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

விளம்பரம்

திருமணம் முடிந்ததும் அனந்த் அம்பானியும், ராதிகா மெர்ச்சன்டும் ஒருவருக்கொருவர் வாக்குறுதி அளித்து கொண்டனர். அப்போது அங்கிருந்த அனைவரும் மணமக்களை வாழ்த்தினர். அதைத் தொடர்ந்து இன்று சுப ஆசீர்வாத நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில், பல்வேறு திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றுள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
ANANT AMBANI RADHIKA MERCHANT WEDDING CELEBRATIONS
,
Jio
,
mukesh ambani
,
Nita Ambani
,
Reliance

Related posts

மும்பை: பாலியல் பலாத்கார குற்றவாளி போலீசாருடனான துப்பாக்கி சூட்டில் பலி

பலாத்காரத்திற்கு ஆளான மகளை 2 மகன்களுடன் சேர்ந்து பெற்ற தாயே தீர்த்து கட்டிய கொடூரம்

ஜம்மு காஷ்மீர் தேர்தல் – வாக்குறுதிகளை அறிவித்த ராகுல் காந்தி