கோலாப்பூரில் ராகுல்: சத்ரபதி சிவாஜி சிலையைத் திறந்துவைக்கிறார்!

காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கோலாப்பூரில் இன்று பல முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

மகாராஷ்டிரத்தில் இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பக்வா சௌக்கில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜா சிலை திறப்பு விழா உள்ளிட்ட மாநிலத்தின் முக்கிய நிகழ்ச்சிகளில் காந்தி பங்கேற்க உள்ளார்.

இதையும் படிக்க: ஹரியாணா தேர்தல்: 11 மணி நிலவரம்!

ராகுல் காந்தியின் வருகை மிகவும் சிறப்பானது. அவர் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் சிலையைத் திறந்துவைப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று கோலாப்பூர் காங்கிரஸ் தலைவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோலே, எதிர்க்கட்சி கூட்டணியான மகா விகாஸ் அகாதி தசராவுக்கு முன் பல இடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடும் என்று கூறினார். மேலும் 150 இடங்களுக்கு மேல் விவாதம் என்பதைத் தகுதியின் அடிப்படையில் விரைவில் முடிவு செய்வோம் என்றார்.

இதையும் படிக்க: அமேதி ஆசிரியர் குடும்பம் படுகொலை: குற்றவாளி மீது என்கவுன்டர்!

சிவசேனா (யுபிடி) தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில்,

மகா விகாஸ் அகாதி கூட்டத்தில் ஒவ்வொரு இடமும் விவாதிக்கப்பட்டு வருகிறது. வரவிருக்கும் மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை ஒவ்வொரு இடத்திலும் தோற்கடிப்போம். மக்களவையில் இந்தக் கட்சிகள் அனைத்தும் எங்களுடன் இருந்ததால், பேரவைத் தேர்தலில் அவர்களுக்கு என்ன கொடுக்கலாம் என்ற விவாதம் நடந்தது. தொடர்ந்து நான்காவது நாளாக விவாதம் இன்று நடைபெறுகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என விவாதிக்கப்படுகிறது, எனவே ஒவ்வொரு தொகுதியும் மறுஆய்வு செய்யப்படுகிறது என்று ராவத் செய்தியாளர்களிடம் கூறினார்.

288 இடங்கள் கொண்ட மகாராஷ்டிர பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆனால், இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை இன்னும் அறிவிக்கவில்லை. வரவிருக்கும் மகாராஷ்டிர தேர்தலில் சிவசேனா (யுபிடி), என்சிபி (சரத் பவார் பிரிவு), காங்கிரஸ் மற்றும் மகா விகாஸ் அகாதி கூட்டணிக்கு இடையே போட்டி நிலவுகிறது. பாஜக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), என்சிபி (அஜித் பவார் பிரிவு) ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டணியாகும்.

Related posts

லடாக் ஆதரவாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை: உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்!

பெண் காவலருக்கு பாலியல் வன்கொடுமை!

ஏ.ஐ. தொழில்நுட்பம் ஆதிக்கம்: போன்பேவில் 60% ஊழியர்கள் பணிநீக்கம்!