கோலி, ரோஹித் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது: கபில் தேவ்!

கோலி, ரோஹித் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது: கபில் தேவ்!உலகக் கோப்பை வெற்றி கேப்டன் கபில் தேவ் யாரும் விராட் கோலி, ரோஹித் இடத்தை பிடிக்க முடியாதெனக் கூறியுள்ளார்.கபில் தேவ் (கோப்புப் படம்)

1983 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை இந்திய அணி கபில் தேவ் தலைமையில் வென்றது குறிப்பிடத்தக்கது. பின்னர் 2007, 2011இல் எம்.எஸ். தோனி தலைமையில் வென்றது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி இந்தாண்டு டி20 உலகக் கோப்பையை வென்று அசத்தியது.

இந்த வெற்றிக்குப் பிறகு விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜடேஜா டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்கள். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ரோஹித், கோலிக்கு மாற்றாக யார் இருப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரை ஷுப்மன் கில் தலைமையில் இளம் இந்திய அணி வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஐஏஎன்ஸுக்கு அளித்த பேட்டியில் கபில் தேவ் கூறியதாவது:

சர்வதேச டி20 போட்டிகளில் யாரும் ரோஹித் சர்மா, விராட் கோலி இடத்தை பிடிக்க முடியாது. யாரும் யாருடைய இடத்தையும் பிடிக்கமுடியாது. அனைவரும் அவர்களது சொந்த இடத்தை பிடிக்கவே கிரிக்கெட் விளையாடுகிறார்கள். சச்சின், தோனி மாதிரிதான் கோலி, ரோஹித் இடத்தையும் யாரும் பிடிக்கமுடியாது என்றார்.

Related posts

ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி; சித்தராமையா பதவி விலகலா…? டி.கே. சிவக்குமார் பதில்

6 வயது சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்த தலைமை ஆசிரியர் கைது

திருப்பதி லட்டுவில் குட்கா பாக்கெட் ? தேவஸ்தானம் மறுப்பு