கோவிலுக்குள் பூ வியாபாரிக்கு கல்லறையா..?

கோவிலுக்குள் பூ வியாபாரிக்கு கல்லறையா..? இந்த ஆச்சரியமான இடம் எங்க இருக்கு தெரியுமா..?

தர்மராஜா கோவில்

பழமனேரிலிருந்து சித்தூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கண்டவூர் அருகே தர்மராஜா கோவில் அமைந்துள்ளது. இதமான சூழ்நிலை கொண்டுள்ள தர்மராஜா கோவில், அதன் வரலாறு தெரிந்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கும். நம் நாட்டில் உள்ள பழமையான கோவில்களின் வரலாறு மற்றும் முக்கியத்துவத்தை பற்றி நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அத்தகைய கோவில்களில் ஒன்று கண்டவூர் அருகே உள்ள தர்மராஜா கோவில் ஆகும். இந்த தர்மராக கோவிலுக்கு அருகில், அபாய ஆஞ்சநேயர் ஸ்வாமி கோவில், வள்ளி தெய்வானை சுப்ரமணிய ஸ்வாமி கோவில், முனீஸ்வரர் கோவில் ஆகிய முக்கிய ஆலயங்கள் கொண்டுள்ளன.

விளம்பரம்

இக்கோவிலில், 60 ஆண்டுகளுக்கு முன், பழமனேறு நகரைச் சேர்ந்த அக்கங்கரி ராமகிருஷ்ணப்பா என்பவர், தினமும் நாள் முழுவதும் தள்ளு வண்டியில் பூ வியாபாரம் செய்து, அதன் மூலம் சம்பாதித்த பணத்தை, 14 நாட்கள் நடக்கும் மகா பாரத யாகத்தைக் காண கோவிலுக்கு வரும் 26 கிராம மக்களுக்கு, அன்னதானம் வழங்கி வந்தார். தற்போது அக்கங்கரி ராமகிருஷ்ணப்பா இவ்வுலகில் இல்லாவிட்டாலும், அவர்களின் நினைவிடமாக கோயிலின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவரின் கல்லறை அமைக்கப்பட்டுள்ளன. காலப்போக்கில் இக்கோயில் பாழடைந்து வருவதால், கோயிலை மேம்படுத்தும் பணியில் அப்பகுதி மக்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

விளம்பரம்

இதையும் வாசிக்க: இந்த வாய்ப்பு உங்களுக்கு தான்… குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் வேலை வாய்ப்பு…

60 ஆண்டுகளுக்கு முன், 26 கிராமங்களில் தள்ளு வண்டியில் பூ வியாபாரம் செய்து, அதன் மூலம் கிடைத்த லாபத்தில், 26 கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு அக்கங்கரி ராமகிருஷ்ணப்பா அன்னதானம் வழங்கினார். மேலும் அவர், பக்தர்களின் வசதிக்காக கடவுள் கொடுத்த அதே உறுதியுடன் தொடர்ந்து பாட்டுப்பாட்டார்.

இதற்கிடையே, வருங்கால சந்ததியினருக்கு வரலாற்றுக் கதைகளை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் கோலாட்டம், பஜனை, நாடகம், மகாபாரதம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அந்த நிகழ்ச்சிகளை காண 26 கிராமங்களைச் சேர்ந்த மக்களும் வருகை தருகின்றனர். அப்போது, இங்கு நடைபெறும் யாகத்தை மிகவும் புனிதமானதாகக் கண்டுகளிக்கின்றனர். மேலும், இங்கு விநியோகிக்கப்படும் பிரசாதங்களை ஏற்றுக் கொள்கின்றனர். இதனையடுத்து இங்கு வந்த மக்கள் அனைவரும் ஒதுக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள இயற்கையை இதமான சூழலையும் கண்டு ரசிக்கின்ற்னர்.

விளம்பரம்

நாடக கலைஞர்கள் அனைவரும் கோவிலுக்கு அருகிலேயே வேஷம் போட்டு வரலாற்றுக் கதைகளை நிகழ்த்துகிறார்கள். இங்கு 14 நாட்கள் நடைபெறும் மகா பாரத யாகத்தை அரங்கேற்றும் நாடகக்கலைஞர்கள், இங்கு வரும் பக்தர்களையும், மக்களையும் மகிழ்வித்து வருகிறார்கள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Hindu Temple
,
Local News

Related posts

விடைத்தாள் மதிப்பீட்டு முறையில் புதிய மாற்றம் – டி.என்.பி.எஸ்.சி. முடிவு

திரைக்கதிர்

அவல் லாடு