கோவையில் கனமழை எதிரொலி: சிறுவாணி அணை நீர்மட்டம் உயர்வு

கோவை : கோவையில் பெய்த கனமழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 42.64 அடியாக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து பெய்த அதிகனமழை பொழிவு காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அடிவாரத்தில் 20 மி.மீ., அணைகட்டு பகுதியில் 27 மி.மீ., மழை பொழிவு பதிவாகியிருந்தது.

அணையின் வரையறுக்கப்பட்ட கொள்ளளவு 44.61 அடியாக இருக்கின்ற நிலையிலே, அணையின் தற்போதைய நீர்மட்டம் 42.64 அடியாக உள்ளது. சிறுவாணி அணையில் இருந்து கோயமுத்தூர் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக வரையறுக்கப்பட்ட 101.40 எம்.எல்.டி. அளவு, 98.19 என்ற அளவில் தண்ணீர் திறக்கப்படுகின்றன.

அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகளும் மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது