கோவையில் மீண்டும் கனமழை

கோவையில் இன்று மீண்டும் கனமழை பெய்து வருகிறது.

கோவை,

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கோவையின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் கோவையில் கனமழை பெய்த நிலையில் இன்று மீண்டும் கனமழை பெய்து வருகிறது. அவினாசி ரோடு, நஞ்சப்பா ரொடு, ரெயில் நிலைய சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

தீபாவளி நெருங்கி வரும் நிலையில் கனமழை பெய்து வருவதால் வியாபாரிகள் சற்று கலக்கம் அடைந்துள்ளனர்.

Related posts

55,000+ இருக்கைகள், மாவட்ட வாரியாக ‘கேபின்’… – விஜய்யின் தவெக மாநாடு களத்தின் ஹைலைட்ஸ்

யூடியூபர் இர்ஃபான் வருத்தம் தெரிவித்து சுகாதாரத் துறைக்கு கடிதம்

Bhopal’s Deaf-Mute Kanishka To Represent India