கோவை ஆத்துப்பாலம் சுண்ணாம்பு கால்வாய் தடுப்பணை நிரம்பியது!

கோவை ஆத்துப்பாலம் சுண்ணாம்பு கால்வாய் தடுப்பணை நிரம்பியது!கோவை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆத்துப்பாலம் சுண்ணாம்பு கால்வாய் தடுப்பணை நிரம்பியுள்ளது.

கோவை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆத்துப்பாலம் சுண்ணாம்பு கால்வாய் தடுப்பணை நிரம்பியுள்ளது. ஆபத்தை உணராமல் இளைஞர்கள் நொய்யலாற்றில் இறங்கி மீன் பிடித்து வருகின்றனர்.

கோவையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் பருவமழையால் வேகமாக தண்ணீர் நிரம்பி வருகிறது.

இந்த நிலையில், கோவை ஆத்துப்பாலம் கால்வாய் பகுதியில் அமைந்துள்ள தடுப்பணை நிறைந்து நொய்யலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் ஆத்துப்பாலம், குணியமுத்தூர், கரும்புக்கடை சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் தடுப்பணையின் கரை ஓரங்களில் மீன் பிடித்து வருகின்றன். அதிலும் சிலர் தண்ணீரில் இறங்கி ஆபத்தை உணராமல் மீன் பிடித்து வருகின்றனர்.

திடீரென வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரித்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு அப்பகுதியில் பாதுகாப்பு எச்சரிக்கை பதாகைகளை வைக்க வேண்டும் என்றும், பாதுகாப்பு இல்லாமல் மீன் பிடித்து வருபவர்களை கண்காணிக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

Related posts

ஐகோர்ட்டு உத்தரவு எதிரொலி; சித்தராமையா பதவி விலகலா…? டி.கே. சிவக்குமார் பதில்

6 வயது சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்த தலைமை ஆசிரியர் கைது

திருப்பதி லட்டுவில் குட்கா பாக்கெட் ? தேவஸ்தானம் மறுப்பு