கோவை சிறுவாணி அணை 43.49 அடியாக உயர்வு!

கோவை: கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக விளங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 43.49 அடியாக உயர்ந்துள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் சிறுவாணி அணை அமைந்து உள்ளது. இந்த அணையில் இருந்து கோயம்புத்தூர் மாநகராட்சியின் பல்வேறு பகுதிளுக்கு நாள்தோறும் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

கோவை மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவைக்காக நாள் ஒன்றுக்கு 265 எம்.எல்.டி. தண்ணீர் தேவையாக உள்ள நிலையில், 101.40 எம்.எல்.டி தண்ணீர் சிறுவாணி குடிநீர் திட்டத்தில் இருந்து எடுத்து கோவை மாநகராட்சி மக்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க |கிருஷ்ணகிரி அணையிலிருந்து 2,680 கன அடி நீர் வெளியேற்றம்

இந்த நிலையில் சிறுவாணி அணை நீர் பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் அணையின் வரையறுக்கப்பட்ட கொள்ளளவு 44.61 அடியாக இருக்கின்ற நிலையிலே, அணையின் தற்போதைய நீர்மட்டம் 43 அடியாக உயர்ந்துள்ளது. அடிவாரத்தில் 14 மி.மீ., அணையின் நீர் பிடிப்பு பகுதியில் 60 மி.மீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது.

தொடர்ந்து அணைப் பகுதியில் மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவை தமிழக – கேரள அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகளும் மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது