கோவை செல்லும் ரயில்கள் ஆவடியிலிருந்து புறப்படும்!

சென்னையிலிருந்து கோவை மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் இன்றிரவு தாமதமாகப் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

  • இன்று(அக்.15) இரவு 7.30 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் – திருவனந்தபுரம் மெயில் (12623), சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இன்றிரவு 8 மணிக்கு புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • இன்று(அக்.15) இரவு 9.05 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் – மேட்டுப்பாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ் (12671), சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பதிலாக ஆவடியிலிருந்து இன்றிரவு 9.30 மணிக்கு புறப்படும்.

  • இன்று(அக்.15) இரவு 9.40 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் – பாலக்காடு எக்ஸ்பிரஸ் (22651), சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பதிலாக ஆவடியிலிருந்து இன்றிரவு 10.15 மணிக்கு புறப்படும்.

  • இன்று(அக்.15) இரவு 10 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் – கோயம்புத்தூர் சேரன் எக்ஸ்பிரஸ் (12673), சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பதிலாக ஆவடியிலிருந்து இன்றிரவு 11 மணிக்கு புறப்படும்.

  • இன்று(அக்.15) இரவு 8.10 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்ட்ரல் – மங்களூரு சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (12601), சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பதிலாக ஆவடியிலிருந்து இன்றிரவு 8.30 மணிக்கு புறப்படும்.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது