சசிகலா, ஓபிஎஸ்க்கு எந்த காலத்திலும் அதிமுகவில் இடமில்லை – எடப்பாடி பழனிசாமி

அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை,

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தோல்வி தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் 3-வது நாளாக அரக்கோணம், தஞ்சை தொகுதிக்கு உட்பட்ட அதிமுக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அரக்கோணம் மக்களவைத் தொகுதியில், அதிமுக தோல்வி அடைந்தது குறித்து நிர்வாகிகளுடன் விவாதிக்கப்பட்டது. அப்போது கட்சித் தலைமை 'யாருடன் கூட்டணி வைக்கலாம்? என கேட்ட நிலையில், நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைத்தால் நன்றாக இருக்கும் என கட்சி நிர்வாகிகள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். அதேவேளையில் பாமக உடன் கூட்டணி வைத்திருந்தாலும் அரக்கோணம் போன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க முடியும் என்றும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோரை அதிமுகவில் மீண்டும் சேர்க்க வேன்டும் என சில நிர்வாகிகள் கூறினர். அதற்கு எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், வைத்திலிங்கம் உள்ளிட்டோருக்கு எந்த காலத்திலும் அதிமுகவில் இடமில்லை என்றும் ஓபிஎஸ், சசிகலாவின் ஆதரவாளர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Related posts

வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு

மகனை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை… குடும்பத் தகராறில் விபரீதம்

மோடி ஆட்சிதான் காமராஜர் ஆட்சி – தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி