சட்டப்பேரவையில் அதிமுகவினர் பங்கேற்க ஒருநாள் தடை!

சட்டப்பேரவையில் அதிமுகவினர் பங்கேற்க ஒருநாள் தடை!எடப்பாடி பழனிசாமி, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர்.DOTCOM

சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் இன்று ஒருநாள் பங்கேற்க தடை விதித்து அவைத் தலைவர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.

கேள்வி நேரத்திற்கு முன்பாக கள்ளச்சாராய சம்பவத்தை விவாதிக்கக்கோரி அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். மேலும், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று அதிமுகவினர் முழக்கங்களை எழுப்பினர்.

இந்நிலையில், பேரவைத் தலைவர் அப்பாவுவின் உத்தரவின் பேரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவைக் கூட்டத்தில் அதிமுகவினர் பங்கேற்க ஒரு நாள் தடை விதித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

மேலும், பேரவையில் அமளியில் ஈடுபட்டு அதிமுகவினர் பேசியது அவைக்குறிப்பில் இடம்பெறாது என்று அப்பாவு தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளிக்கவுள்ளார்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக, அதிமுகவினர் தொடர்ந்து 3 ஆம் நாளாக பேரவையில் அமளியில் ஈடுபட்டனர்.

Related posts

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 64 வயது முதியவர் போக்சோவில் கைது

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

மகனை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை… குடும்பத் தகராறில் விபரீதம்