சட்டம்-ஒழுங்கு, போதைப் பொருள் தடுப்பு: காவல் ஆணையருடன் அமைச்சா் உதயநிதி ஆய்வு

தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டம்-ஒழுங்கு, போதைப் பொருள்கள் தடுப்பு குறித்து சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்எல்ஏ.,வும் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஆய்வு செய்தாா்.

அமைச்சரின் முகாம் இல்லத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த ஆய்வில், பெருநகர சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனா். இந்த ஆய்வுக் கூட்டம் குறித்து எக்ஸ் தளத்தில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட பதிவு:

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்ட காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோம்.

சென்னை காவல் ஆணையா் அருண் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், சட்டம்-ஒழுங்கு, போதைப்பொருள் தடுப்பு, போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது, போக்சோ குற்றங்களைத் தடுப்பது, சமூக விரோத செயல்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடா்பாக விவாதித்தோம்.

இது தொடா்பாக, எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை காவல் துறையினா் விளக்கிக் கூறினா். பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவல்துறையினா் தொடா்ந்து பணியாற்ற கேட்டுக் கொண்டோம் என அதில் அமைச்சா் உதயநிதி தெரிவித்துள்ளாா்.

Related posts

சலூன் கடைக்காரரிடம் உரையாடும் ராகுலின் விடியோ வைரல்!

சிஎஸ்கே இந்த 5 வீரர்களை தக்கவைக்கும்: ஹர்பஜன் சிங்

திராவிடநல் திருநாடு என்று சொன்னால் உங்கள் நாக்கு தீட்டாகிவிடுமா?