சதம் விளாசிய ஆலி போப்; 416 ரன்களுக்கு இங்கிலாந்து ஆட்டமிழப்பு!

சதம் விளாசிய ஆலி போப்; 416 ரன்களுக்கு இங்கிலாந்து ஆட்டமிழப்பு!மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 416 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.ஆலி போப்படம் | இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 416 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹமில் நேற்று (ஜூலை 18) தொடங்கியது.

இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஆலி போப் 121 ரன்கள் (15 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர்) எடுத்தார். அவரைத் தொடர்ந்து, அதிகபட்சமாக பென் டக்கெட் 71 ரன்களும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 69 ரன்களும் எடுத்தனர்.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் அல்சாரி ஜோசப் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜேடன் சீல்ஸ், கெவின் சின்க்ளேர் மற்றும் காவெம் ஹாட்ஜ் தலா 2 விக்கெட்டுகளையும், ஷமர் ஜோசப் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இரண்டாம் நாளான இன்று (ஜூலை 19) மேற்கிந்தியத் தீவுகள் தனது முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

Related posts

பங்குச் சந்தை உயர்வு: 90 சதவீத சிறு முதலீட்டாளர்களுக்கு இழப்பு – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மராத்தா இடஒதுக்கீடு விவகாரம்: 8-வது நாளாக மனோஜ் ஜரங்கே உண்ணாவிரதம்.. உடல்நிலை பாதிப்பு

3 நாள் அமெரிக்க பயணம் நிறைவு: டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி