ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் உள்ள சாலைகளின் இணைப்பை வலுப்படுத்த ரூ.11,000 கோடிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தில்லியில், முதல்வர் விஷ்ணு தியோ சாயுடனான மறுஆய்வுக் கூட்டத்தின் போது சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியிடமிருந்து இந்த ஒப்புதல் பெறப்பட்டது.
இந்த நிதி நான்கு முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்த செலவிடப்படும். அதே வேளையில், இது மாநிலத்தின் போக்குவரத்து நிலப்பரப்பை மாற்றியமைக்கும், தொழில்துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதே போல மற்ற திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கவும் கட்கரி ஒப்புதல் அளித்துள்ளார்.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து முடிவு!
இதனிடையில், சத்தீஸ்கரில் நடைபெற்று வரும் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களின் முன்னேற்றத்தை மத்திய அமைச்சர் மதிப்பாய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளை தாமதப்படுத்தும் தடைகளை அகற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். அனுமதிகளை விரைவுபடுத்தவும், நிலுவையில் உள்ள பிரச்சினைகளை தீர்க்கவும் வனத்துறைக்கும் கட்கரி உத்தரவிட்டுள்ளார்.
உர்கா முதல் கட்கோரா பைபாஸ், பாஸ்னா முதல் சரண்கர் வரை, சரண்கர் முதல் ராய்கர் பாதை வரை மற்றும் ராய்ப்பூர் முதல் லக்கானடன் பொருளாதார வழித்தடம் வரையான நான்கு திட்டங்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்த திட்டங்களின் மொத்த நீளம் 236.1 கி.மீ ஆகும். இதற்காக மத்திய அமைச்சர் ரூ.9,208 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், நிதின் கட்கரி மற்றும் விஷ்ணு தியோ உடனான பேச்சுவார்த்தையின் போது மத்திய சாலை நிதியத்தின் கீழ் ரூ.908 கோடி நிதி எட்டு திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் பல்வேறு சாலைகள் மேம்பாட்டுக்காக கூடுதலாக ரூ.1,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் ராய்ப்பூர்-விசாகப்பட்டினம் சாலை மற்றும் பிலாஸ்பூர்-உர்கா-பதால்கான் சாலையை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கவும் கட்கரி உத்தரவிட்டார்.