சத்தீஸ்கர்: என்கவுன்டரில் 30 நக்சல்கள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 30 நக்சல்களை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.

சத்தீஸ்கர் மாநிலம், நாராயண்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டத்தின் எல்லையில் உள்ள அபுஜ்மாத் வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் இணைந்து காவல்துறையினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அமேதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூரக் கொலை! ராகுல் காந்தி ஆறுதல்

அப்போது பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்த சண்டையில் 30 நக்சல்களை பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தொடர்ந்து நக்சல்களின் உடல்களும், ஏகே 47 உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்களும் அப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

இதனிடையே என்கவுன்டர் நடந்ததை பஸ்தர் ஐஜி சுந்தர்ராஜ் உறுதி செய்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

Related posts

தீபாவளிக்கு 14,086 சிறப்புப் பேருந்துகள்

பிரிக்ஸ் மாநாடு: பிரதமா் மோடி இன்று ரஷியா பயணம்

உமா பதிப்பக நிறுவனா் இராம. லட்சுமணன் காலமானாா்