சத்தீஸ்கர்: பயிற்சி மையத்தில் மின்னல் தாக்கி 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலி

சத்தீஸ்கரில் துணை ராணுவப் படையின் நக்சலைட் எதிர்ப்பு பயிற்சி மையத்தில் மின்னல் தாக்கியதில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியானார்கள்.

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் துணை ராணுவப் படையின் நக்சலைட் எதிர்ப்பு பயிற்சி மையம் உள்ளது. இங்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் பயிற்சி நடைபெற்றுக்கொண்டிருந்த போது திடீரென மின்னல் தாக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் மகேந்திர குமார் மற்றும் சாஹுவத் ஆலம் ஆகிய 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் மின்னல் தாக்கி பலத்த காயமடைந்தனர்.

பாலியல் குற்றங்கள் குறித்து நடிகைகள் உடனே புகார் அளிக்க வேண்டும்: இயக்குநர் பேரரசு

இருவரும் ஆம்புலன்ஸில் உடனே தண்டேவாடா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பரிசோதனைக்குப் பிறகு, அவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதுகுறித்து பலியான வீரர்களின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக அதிகாரி தெரிவித்தார்.

கோட் படம்: முதல் நாளில் ரூ. 126 கோடி வசூல் செய்து சாதனை

பலியான வீரர்களில் மகேந்திர குமார் உத்தரபிரதேச மாநிலத்தையும், ஆலம் ஜார்கண்ட் மாநிலத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். வியாழக்கிழமை நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையின் போது அண்டை மாவட்டமான பிஜாப்பூர் மாவட்டத்திலும் இதேபோன்று மின்னல் தாக்கியதில் சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் பலியானார் என்று போலீஸார் தெரிவித்தனர்.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!