சத்யராஜ் நடிக்கும் புதிய வெப் தொடரின் பர்ஸ்ட் லுக் வெளியானது

நடிகர் சத்யராஜ் நடிக்கும் 'மை பெர்பெக்ட் ஹஸ்பண்ட்' வெப் தொடரின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணைத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை,

சத்யராஜ் நடிப்பில் முகமது ரசித் தயாரிப்பில் உருவாகியுள்ள வெப் தொடர் 'மை பெர்பெக்ட் ஹஸ்பண்ட்'. இந்த வெப் தொடரில் சீதா, ரேகா, வர்ஷா பொல்லம்மா, ரக்சன், லிவிங்ஸ்டன், அஜீத் காலிக், கிருத்திகா மனோகர், ராகவி மற்றும் ரேஷ்மா பசுபால்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தாமிரா இயக்கியுள்ள இந்த வெப் தொடருக்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.

இந்த வெப் தொடரின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. மூன்று ஹீரோயின்களுடன் சத்யராஜ் இடம்பெற்றிருக்கும் 'மை பெர்பெக்ட் ஹஸ்பண்ட்' சீரிஸின் பர்ஸ்ட் லுக், ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது. அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Original Article

Related posts

பாலியல் புகாரை நிரூபித்தால் கணவரை விட்டு விலக தயார்- ஜானி மாஸ்டர் மனைவி

ரிஷப் ஷெட்டி இல்லை…’காந்தாரா’வில் முதலில் நடிக்க இருந்தது இவர்தான்

கார் விபத்தில் சிக்கிய பிரபல பாலிவுட் நடிகர் – ஐசியுவில் அனுமதி