சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமாரின் எழுச்சி சாத்தியமானது எப்படி?

பாஜகவுக்கு முக்கிய கூட்டணி – சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமாரின் எழுச்சி சாத்தியமானது எப்படி?

நாயுடு, நிதிஷ்

ஆந்திராவில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி இருக்கும் சந்திரபாபு நாயுடு, பிகாரில் எந்தக் கூட்டணியில் இருந்தாலும் தனது அரசியல் வலிமையை பறைசாற்றும் நிதிஷ்குமார் ஆகிய இருவரும், மத்தியில் அமைய உள்ள பாரதிய ஜனதா அரசுக்கு மிக முக்கியமான கூட்டணி தலைவர்களாக உருவெடுத்துள்ளனர். அரசியல் ரீதியாக இந்த இருவரின் எழுச்சி எப்படி சாத்தியமானது என்பதை அலசுகிறது இந்த சிறப்புத் தொகுப்பில் பார்க்கலாம்.

ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதியை கட்டமைக்க சிறப்பு நிதி அளிக்காத காரணத்திற்காக, பாஜக கூட்டணியில் இருந்து 2018ஆம் ஆண்டு விலகிய சந்திரபாபு நாயுடு, 2019 மக்களவைத் தேர்தலிலும், ஆந்திரா சட்டப்பேரவைத் தேர்தலிலும் படுதோல்வியை சந்தித்தார். ஆந்திராவின் முதலமைச்சராக பதவியேற்ற ஜெகன் மோகன், சந்திரபாபு நாயுடுவுக்கு அரசியல் ரீதியாக நெருக்கடி அளித்தது மட்டுமின்றி, சட்டப்பேரவையிலும் சவால் விடும் வகையில் பலமுறை பேசினார்.

விளம்பரம்

இந்த சூழலில் தான் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 371 கோடி ரூபாய் ஊழல் புகாரில், ஜெகன் மோகன் தலைமையிலான ஆந்திரா அரசு தொடர்ந்த வழக்கில், சந்திரபாபு நாயுடு சிறையில் அடைக்கப்பட்டார். சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பாக நடந்த இந்த திடீர் கைது, சந்திரபாபு நாயுடுவின் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடக் கூடும் என அவரது ஆதரவாளர்கள் அஞ்சினர்.

ஆனால், பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசுடன் மீண்டும் நட்பை புதுப்பித்துக் கொண்ட சந்திரபாபு நாயுடுவுக்கு 2023 நவம்பரில் இடைக்கால பெயில் கிடைத்தது. இதன் பின்னர் மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்த சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் தலைமையிலான ஜனசேனா கட்சியையும் கூட்டணியில் இணைத்துக் கொண்டார்.

விளம்பரம்

கடந்த 1999ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்த சந்திரபாபு நாயுடு, கிங் மேக்கர் என அறியப்பட்டார். மத்திய அரசுக்கு பெரும்பான்மை இல்லாதபோது ஆதரவுக் கரம் நீட்டியதன் மூலம் கிங் மேக்கராக திகழ்ந்தார் சந்திரபாபு நாயுடு. தற்போது பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், 16 எம்.பி.க்களுடன் இரண்டாவது பெரிய கட்சியாக திகழும் சந்திரபாபு நாயுடு, பெரும்பான்மை பலத்தை பெறாத பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சியமைக்க ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார்.

விளம்பரம்

மறுபுறம் பிகாரின் அரசியல் அடையாளமாக திகழும் நிதிஷ்குமார், இந்த மக்களவைத் தேர்தலில் 12 எம்.பி.க்களை வென்று, பாரதிய ஜனதா கட்சியில் மூன்றாவது பெரிய கட்சியாக ஐக்கிய ஜனதா தளத்தை உருவெடுக்க வைத்துள்ளார். கடந்த 1996ஆம் ஆண்டு முதல் பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து வந்த நிதிஷ்குமார், 2005ஆம் ஆண்டு பிகார் முதலமைச்சராக பதவியேற்றார். அதற்கு முன்பாக, 2001 முதல் 2004 வரையிலான காலகட்டத்தில் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் ரயில்வே அமைச்சராகவும்
முத்திரை பதித்தவர்.

விளம்பரம்

இதையும் படிங்க:
தமிழகத்தில் 2026ம் ஆண்டு ஆட்சியை பிடிப்பதே இலக்கு – அண்ணாமலை

இந்த சூழலில், 2013ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதிஷ்குமார், தனது அரசியல் எதிரியான லாலு பிரசாத்துடன் கை கோர்த்ததுடன், காங்கிரஸையும் இணைத்து மகா கூட்டணியை அமைத்தார். பின்னர் பல்வேறு காரணங்களால், பாஜகவுடன் மீண்டும் 2017ஆம் ஆண்டு இணைந்த நிதிஷ்குமார், சட்டமன்றத் தேர்தலில் வென்று பிகாரின் முதலமைச்சராக தொடர்ந்தார். இடையில் மீண்டும் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அமைத்த நிதிஷ், திடீரென பாஜக ஆதரவுடன் தனது ஆட்சியை தொடர்ந்து வருகிறார். இந்த சூழலில் பாஜக கூட்டணியில் மக்களவைத் தேர்தலில் சந்தித்த நிதிஷ், 12 எம்.பி.க்களை வென்றதன் மூலம் மீண்டும் தேசிய அரசியலில் வலிமை மிக்க கட்சித் தலைவராக உருவெடுத்துள்ளார்.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Lok Sabha Election Results 2024
,
N Chandrababu Naidu
,
nithish kumar

Related posts

விழுப்புரம்- திருச்சி பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம்

ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை குற்றப் பரம்பரையாக சித்தரிப்பதா? நடிகை கஸ்தூரிக்கு ஆ.ராசா கண்டனம்

‘2கே லவ் ஸ்டோரி’ படத்தின் டீசர் குறித்த அப்டேட்