சந்திர பாபு, நிதீஷ் குமாருடன் கூட்டணி.. சமரசங்களை செய்யுமா பாஜக?

கூட்டணியால் பாஜக இழக்கப் போவது என்ன? நரேந்திர மோடியின் அடுத்த மூவ் என்ன?

நிதீஷ் குமார், சந்திரபாபு நாயுடுவுடன் பிரதமர் மோடி

மக்களவை தேர்தலின் முடிவுகள் கடந்த செவ்வாய்கிழமை வெளியானது. 400 இடங்களுக்கு மேல் வெற்றி கிடைக்கும் என எதிர்ப்பார்த்திருந்த தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் பெரும்பான்மைக்கு சற்று அதிகமாக 292 இடங்கள் மட்டுமே கிடைத்தது. இந்தியா கூட்டணி 234 தொகுதிகளை வென்றுள்ளது.

மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் சந்திரபாபு நாயுடுவும், நிதீஷ் குமாரும் கிங் மேக்கர்களாக உருவாகியுள்ள நிலையில், அவர்கள் முக்கிய அமைச்சர் பதவிகளை குறிவைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவையும், நிதீஷ் குமாரையும் அமைச்சரவையில் சேர்ப்பதால், பாஜகவின் முன்பிருந்த செயல்முறைகளில் பெரிய மாற்றம் நிகழும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

விளம்பரம்

இதையும் படிக்க:
முக்கிய இலாக்காக்களை குறிவைக்கும் சந்திரபாபு நாயுடு, நிதீஷ் குமார்! எந்தெந்த துறைகள் தெரியுமா?

நிதீஷ் குமார் பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டபோது, ‘இந்த நாட்டை சாதியின் பெயரால் பிரிக்க நினைக்கிறார்கள்’ என கடுமையாக விமர்சித்திருந்தார் பிரதமர் மோடி. மேலும் சாதிவாரி கணக்கெடுப்பை பாஜக எப்போதும் எதிர்த்ததில்லை என அமித் ஷா விளக்கமளித்திருந்தார். ஆனால் தற்போது ஐக்கிய ஜனதா தளம் அங்கம் வகிக்கப்போகும் பாஜக அமைச்சரவையில், ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பாஜக என்ன நிலைபாடு எடுக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதே போல சிஏஏ சட்டத்தையும் நிதீஷ் குமார் எதிர்த்த நிலையில், சிஏஏ நாடு முழுவதும் அமல்படுத்தப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

விளம்பரம்

மேலும் நிதீஷ் குமாரின் முக்கிய கோரிக்கையான பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து போன்ற விவகாரங்களிலும், பாஜக என்ன முடிவெடுக்கும் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதுமட்டுமின்றி, ஆந்திர பிரதேசத்திற்கும் சிறப்பு அந்தஸ்து கோரியிருக்கிறார் சந்திரபாபு நாயுடு. இது குறித்தான சர்ச்சையில் தான் கடந்த 2018ஆம் ஆண்டு பாஜக கூட்டணியை விட்டு வெளியேறினார். ஆனால் தற்போது மீண்டும் அதே கோரிக்கையுடன் கிங் மேக்கராக இருப்பது அவருக்கு சாதகமானதாகவே பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து தலைநகர் அமராவதியை புதுப்பிப்பதற்கும் பெரும்தொகையை அவர் கோருவார். இதன்மூலம் தான் ஆந்திராவில் வேலைவாய்ப்பின்மையை போக்க முடியும் என சந்திரபாபு நாயுடு கணிக்கிறார். மேலும், போலவரம் பாசனத் திட்டத்தை 2 ஆண்டுகளுக்குள் முடிப்பேன் என்று இந்த தேர்தலுக்கு முன் வாக்குறுதி அளித்ததால், ஆந்திராவிற்கு அதிக நிதிஒதுக்க சந்திரபாபு நாயுடு வலியுறுத்துவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதுவரை குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்ததிலிருந்தே நரேந்திர மோடி பெரும்பான்மை ஆட்சியை தான் பெற்றிருக்கிறார். ஆனால் தற்போது, கூட்டணி ஆட்சியை அவர் அமைக்கவிருப்பதால், அவரின் செயல்பாடுகளிலும், முன்பு பாஜகவிடம் இருந்த அந்த உறுதியும் தற்போது இருக்குமா என்ற கேள்வியும் இதோடு எழுகிறது.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
BJP
,
N Chandrababu Naidu
,
Nitish Kumar

Related posts

23-ம் தேதி இலங்கையில் பொது விடுமுறை அறிவிப்பு

ஒரே இரவில் 100 உக்ரைன் டிரோன்களை அழித்த ரஷிய ராணுவம்

கோர்ட்டில் நீதிபதியை சுட்டுக்கொன்ற போலீஸ் அதிகாரி…பரபரப்பு சம்பவம்