சந்தீப் கோஷின் மருத்துவப் பதிவு ரத்து!

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொல்லப்பட்ட ஆர்.ஜி. கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷின் மருத்துவப் பதிவை மேற்கு வங்க மருத்துவ கவுன்சில் ரத்து செய்துள்ளது.

கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் கைது செய்யப்பட்டார்.

முன்னதாகவே அவர் தனது கல்லூரி முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார்.

இதையடுத்து சந்தீப் கோஷிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டு விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்துள்ளது.

உதயநிதி துணை முதல்வராவது எப்போது? – அமைச்சர் பதில்!

சிபிஐ தாக்கல் செய்துள்ள அறிக்கையில், 'பெண் மருத்துவர் கொலையில் சந்தீப் கோஷ் பல்வேறு விஷயங்களை மறைத்துள்ளது தெரிய வந்துள்ளது. கொலையை தற்கொலையாக மாற்ற முயற்சிகள் நடந்துள்ளன' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சந்தீப் கோஷின் மருத்துவப் பயிற்சி பதிவை ரத்து செய்து மேற்கு வங்க மருத்துவ கவுன்சில் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இன்று(செப். 19) முதல் இது நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சந்தீப் கோஷ் மருத்துவப் பணி செய்ய முடியாது.

Related posts

மருத்துவர்கள் போராட்டம்: காவல் துறை அழுத்தத்தால் கூடாரம், மின்விசிறி அகற்றம்!

சதம் விளாசிய ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியது என்ன?

பென் டக்கெட், வில் ஜாக்ஸ் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 316 ரன்கள் இலக்கு!