சந்தீப் கோஷ் மீது ஆண் செவிலியர் பாலியல் குற்றச்சாட்டு!

ஹாங்காங்கைச் சேர்ந்த ஆண் செவிலியருக்கு கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் பாலியல் சீண்டல் அளித்ததாக அந்த நாட்டு ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டில், ஹாங்காங் நாட்டின் மருத்துவக் கல்லூரிக்கு சந்தீப் கோஷ் சென்றிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டு என்ன?

யாவ் மா தேய் மாகாணத்தில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் கடந்த 2017 ஏப்ரல் 8ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வில் சந்தீப் கோஷ் பங்கேற்றுள்ளார்.

அப்போது, மருத்துவமனையின் அறையில் செவிலியருக்கு பயிலும் மாணவர்கள் ஆடை மாற்றிக் கொண்டிருக்கும்போது உள்ளே சென்ற சந்தீப் கோஷ், அந்தரங்க பகுதிகளில் கை வைத்ததாக ஒரு மாணவர் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.

மேலும், கை வைத்தது மட்டுமின்றி இது உனக்கு பிடிக்குமா? என்றும் சந்தீப் கோஷ் கேட்டதாக அந்த மாணவர் குற்றச்சாட்டில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அப்போதே விசாரணை நடத்தப்பட்டதில், தவறுதலாக கைப்பட்டதாகவும், வேண்டுமென்றே செய்யவில்லை என்றும் சந்தீப் கோஷ் விளக்கம் அளித்ததாக ஹாங்காங் நாட்டின் ஊடகமான ‘செளத் சீனா மார்னிங் போஸ்ட்’டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என் ஒப்புதல் இல்லாமல் விவாகரத்து அறிவிப்பு! ஜெயம் ரவி மனைவி

சிறையில் சந்தீப் கோஷ்

கொல்கத்தாவில் ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் பணிபுரிந்த முதுநிலை பயிலும் பயிற்சி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, அந்த கல்லூரியின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தொடர்ந்து, கொலை வழக்கை சிபிஐ காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது, மருத்துவமனையில் நிதி முறைகேடு நடந்ததாக மற்றொரு வழக்கு பதிந்து சந்தீப் கோஷை கைது செய்தனர்.

தற்போது மருத்துவமனையில் நடைபெற்ற நிதி முறைகேட்டுக்கும் பயிற்சி மருத்துவரின் கொலைக்கும் தொடர்பு உள்ளதா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் சந்தீப் கோஷை காவலில் எடுத்து சிபிஐ விசாரித்து வருகின்றது.

Related posts

2025-இல் இந்தியாவில் க்வாட் மாநாடு: பிரதமர் மோடி

திருப்பதி லட்டு விவகாரம்: ஜெகன்மோகன் ரெட்டி வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினர் கைது

திருப்பதி லட்டு விவகாரம்.. சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்