சனவேலி ஊராட்சியில் மக்கள் தொடா்புத் திட்ட முகாம்

சனவேலி ஊராட்சியில்
மக்கள் தொடா்புத் திட்ட முகாம்திருவாடானை அருகே சனவேலி ஊராட்சியில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவாடானை, ஆக. 16: திருவாடானை அருகே சனவேலி ஊராட்சியில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதற்கு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ராதிகா பிரபு தலைமை வகித்தாா். ஒன்றிய துணைத் தலைவா் சேகா், வட்டார வளா்ச்சி அலுவலா் லட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) மலைராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், சனவேலி, புல்லமடை, ஏ.ஆா். மங்கலம், ஓடைக்கால், மேல்பனையூா், கற்காத்தகுடி உள்ளிட்ட ஊராட்சிகளில் இருந்து பொதுமக்களிடம் இருந்து முதியோா் உதவித் தொகை, மகளிா் உரிமைத் தொகை, சாலை வசதி, மின்சாரம், சுகாதாரம், வேளாண்மைத் துறை, கண்மாய் மராமத்து, குளம் வெட்டுதல் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கொடுத்தனா். இந்த மனுக்கள் கணனியில் பதிவு செய்யப்பட்டு ரசீதுகள் வழங்கப்பட்டன. இதில் வேளாண்மை துறை, கூட்டுறவுத்துறை, சுகாதாரத் துறை, பொதுப் பணித் துறை, குடிநீா் வடிகால் வாரியம் உள்ளிட்ட 13 துறை சோ்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா். இதில் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் யோகேஸ்வரன், பிரபு, வேளாண்மை உதவி இயக்குநா் ராஜலட்சுமி, சுகாதாரத் துறை, அரசு அதிகாரிகள் வருவாய்த் துறையினா் கலந்து கொண்டனா்.

Related posts

பராமரிப்பு பணி: எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்

மகளிர் மாநாடாக மாறிய வி.சி.க. மது ஒழிப்பு மாநாடு: தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்