சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகும் பிரபல வேகப் பந்துவீச்சாளர்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் விலகியுள்ளார்.

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தொடரப் போவதில்லை என்பதை தனது எக்ஸ் வலைத்தளப் பதிவின் மூலம் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிக்க: மிக மோசமான பேட்டிங்..! 46 ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்திய அணி!

அவரது எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக சில ஆண்டுகள் செயல்பட வாய்ப்பளித்த அணி நிர்வாகத்துக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். துரதிருஷ்டவசமாக, அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக என்னால் தொடர முடியாது.

டேல் ஸ்டெயின் (கோப்புப் படம்)

Cricket announcement.
A big thank you to Sunrisers Hyderabad for my few years with them as bowling coach at the IPL, unfortunately, I won’t be returning for IPL 2025.
However, I will continue to work with Sunrisers Eastern Cape in the SA20 here in South Africa.
Two time…

— Dale Steyn (@DaleSteyn62) October 16, 2024

இருப்பினும், தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியின் பயிற்சியாளராக தொடர்ந்து செயல்படுவேன். இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை மூன்றாவது முறையாக கோப்பையை வெல்ல வைக்க முயற்சி செய்வோம் எனப் பதிவிட்டுள்ளார்.

Related posts

தூத்துக்குடி: கடல் அலையில் சிக்கி 2 பெண்கள் பலி!

கிருஷ்ணகிரி அருகே தீ விபத்து: தீயணைப்புத் துறை அலுவலர், அவரது தந்தை பலத்த காயம்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை!