சமந்தா நடித்த ‘சிட்டாடல்: ஹனி பன்னி’ வெப் தொடரின் அப்டேட்

நடிகை சமந்தா மற்றும் வருண் தவான் நடித்த 'சிட்டாடல்: ஹனி பன்னி' வெப் தொடர் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

மும்பை,

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையான சமந்தாவுக்கு தமிழ், தெலுங்கு திரை உலகில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு மொழியில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். இந்நிலையில் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சமந்தா. பின்னர், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

இதையடுத்து மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிய சமந்தா மயோடிசிஸ் என்ற அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக சினிமாவில் இருந்து ஓய்வெடுத்த சமந்தா ஆன்மீகம், உடற்பயிற்சி யோகா ஆகியவற்றில் தீவிர ஆர்வம் காட்டினார். நோயில் இருந்து மீண்டு வந்த சமந்தா புதிய படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

இந்தநிலையில் நடிகை சமந்தா, ராஜ் மற்றும் டிகே இயக்கிய 'தி பேமிலி மேன்' சீசனில் கடைசியாக நடித்திருந்தார். தற்போது இவர்களது கூட்டணியில் 2-வது முறையாக 'சிட்டாடல்: ஹனி பன்னி' என்ற தொடரிலும் நடித்துள்ளார். இந்த தொடரில் நடிகர் வருண் தவான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இந்தத் தொடரில் சிக்கந்தர் கெர், எம்மா கேனிங், கே கே மேனன் மற்றும் சாகிப் சலீம் ஆகியோர் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்துள்ளனர்.

View this post on Instagram

A post shared by Raj & DK (@rajanddk)

ஆக்சன் திரில்லர் நிறைந்த இந்த தொடர் குறித்து டைரக்டர் ராஜ் மற்றும் டிகே தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அதில், இந்தத் தொடரைப் பற்றிய முக்கிய அறிவிப்புகள் வருகிற ஆகஸ்ட் 1-ந் தேதி அன்று வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Original Article

Related posts

‘தளபதி 69’ படத்தில் காவல் அதிகாரியாக நடிக்கும் விஜய்…!

‘லப்பர் பந்து’ படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு

சமந்தா நடித்த ‘சிட்டாடல்: ஹனி பன்னி’ டிரெய்லர் வெளியீடு