சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்றார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை,

தந்தை பெரியாரின் ஒவ்வொரு பிறந்த நாளும் "சமூகநீதி நாளாக'' கடைபிடிக்கப்படும் என்றும்; அப்பிறந்த நாள் அன்று "சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்க வேண்டும்'' என்றும் தமிழ்நாடு முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த 6.9.2021 அன்று சட்டசபையில் அறிவித்தார்.

அதன்படி, தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தலைமைச் செயலகத்தில் ராணுவ அணிவகுப்பு மைதானத்தில், பெரியாரின் உருவப் படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர், சமூகநீதி நாள் உறுதிமொழியை முதல்-அமைச்சர் ஏற்றுக்கொண்டார்.

உறுதிமொழியை முதல்-அமைச்சர் வாசிக்க, அமைச்சர்கள், அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் அந்த உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்