உச்சநீதிமன்ற புத்தகப் பதிப்புகள் வெளியீட்டு விழா இன்று(நவ. 5) புதுதில்லியில் நடைபெற்றது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட், சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் உள்பட பலர் கலந்துகொண்டு உச்சநீதிமன்றத்தின் 3 புத்தகப் பதிப்புகளை வெளியீட்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, “சம நீதியும், காலனியாதிக்க கால பழக்கங்களளும் களையப்பட்டு நாட்டின் நீதித்துறைக்கு வழிகாட்டிகளாக அமைய வேண்டும்.
சுதந்திர இந்தியாவின் நிலைத்தன்மை தக்க வைத்து வருவதில் நீதிமன்றங்களின் பங்களிப்பு அளப்பரியது. ‘தேசத்துக்கான நீதி’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள புத்தகம், உச்சநீதிமன்றத்தின் 75 ஆண்டு கால நெடும் பயணத்தில் உள்ள முக்கிய அம்சங்களை பிரதிபலிக்கிறது. மக்களின் வாழ்வில் பல்வேறு கோணங்களில் உச்ச நீதிமன்றத்தின் தாக்கம் குறித்தும் விவரிக்கிறது.
நமது நீதி வழங்கும் முறை சிறந்த சமூகத்தை கட்டமைப்பத்ற்கான நமது இலக்குக்கு வலு சேர்ப்பதாக அமைய வேண்டும்” என்றார்.
மேலும், “உச்சநீதிமன்றத்தை மாபெரும் நிறுவனமாக கட்டமைத்ததற்காக நீதித்துறை அமர்வைச் சார்ந்த இந்நாள், முன்னாள் உறுப்பினர்கள் பாராட்டுகள்.இலவச சட்ட உதவி மற்றும் சிறைத்துறை சீர்திருத்தங்கள் ஆகியவை குறித்து இன்று வெளியிடப்பட்டுள்ள 3 புத்தகங்களும் உணர்ந்துகொள்ள உதவும். அதுமட்டுமல்லாது, நமது நாட்டின் ஜனநாயகப் பயணத்தில் உச்சநீதிமன்றம் ஆற்றியுள்ள மகத்தான பங்களிப்பு குறித்தும் மக்கல் அறிந்துகொள்ள உதவும்” என்றார்.