சரத் பவாருடன் மீண்டும் இணைந்த அஜித்தின் ஆதரவாளர்கள்!

சரத் பவாருடன் மீண்டும் இணைந்த அஜித்தின் ஆதரவாளர்கள்!தேசியவாத காங்கிரஸின் 4 முக்கிய நிர்வாகிகள் சரத் பவாருடன் இணைந்தனர்.சரத் பவாருடன் மீண்டும் இணைந்த அஜித்தின் ஆதரவாளர்கள்

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் அஜித் பவாரின் ஆதரவாளர்கள், அக்கட்சியின் நிறுவனர் சரத் பவாரின் அணியில் மீண்டும் இணைந்தனர்.

புணேவில் உள்ள சரத் பவாரின் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில், பிம்ப்ரி-சின்ச்வாட் நகரின் மூத்த தலைவர் அஜித் காவ்ஹானே தலைமையில் 4 நிர்வாகிகள் சரத் பவாரை சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்.

இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார்) அணியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே கூறியதாவது:

“மகாராஷ்டிரத்துக்காகவும் நாட்டின் நலனுக்காகவும் கடந்த 60 ஆண்டுகளாக சரத் பவார் பணியாற்றி வருகிறார். அவரின் கொள்கை மீது நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். எதிர்க்கட்சியினர்கூட பலர் அவர்மீது நம்பிக்கை வைத்துள்ளனர், அதனால்தான் எங்களுடன் மீண்டும் இணைகிறார்கள்.” எனத் தெரிவித்தார்.

அஜித் காவ்ஹானே கூறுகையில், “நாங்கள் அஜித் பவாரின் அணியில் இருந்து நேற்று ராஜிநாமா செய்தோம். இன்று சரத் பவாரை சந்தித்து வாழ்த்து பெறுவதற்காக வந்தோம். பிம்ப்ரி-சின்ச்வாட் நகரின் வளர்ச்சிக்கு அஜித் பவாரும், சரத் பவாரும் நிறைய செய்துள்ளார்கள். ஆனால், 2017ஆம் ஆண்டு பாஜக கைப்பற்றிய பிறகு, வளர்ச்சிப் பணிகள் பிற பகுதிகளை ஒப்பிடுகையில் தொய்வடைந்துள்ளது. அங்கு நடைபெறும் ஊழலுக்கு எம்எல்ஏவே காரணம்.” எனத் தெரிவித்தார்.

கடந்தாண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சில எம்எல்ஏக்களுடன் பாஜக, சிவசேனை(ஏக்நாத்) கூட்டணி அரசுக்கு அஜித் பவார் ஆதரவு அளித்து துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதிகளவிலான எம்எல்ஏக்களின் ஆதரவு அஜித் பவாரின் தரப்புக்கு இருந்ததால், கட்சியின் பெயரும் சின்னமும் அவருக்கு அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

புதிய சின்னத்தில் மக்களவைத் தேர்தலை சந்தித்த சரத் பவார் அணியினர், அஜித் பவார் அணியினரைவிட அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.

இந்த நிலையில், மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு இந்தாண்டு தேர்தல் நடைபெறுவதை அடுத்து, அஜித் பவார் அணியில் இருந்து விலகி, மீண்டும் சரத் பவார் அணிக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் வரத் தொடங்கியுள்ளனர்.

Related posts

காங்கிரஸ் மற்றும் சாதி கட்சிகளிடம் இருந்து தலித் தலைவர்கள் விலகி இருக்க வேண்டும் – மாயாவதி

இந்தியாவில் முதல்முறை; கேரளாவில் ஒருவருக்கு 1-பி வகை குரங்கம்மை பாதிப்பு

திருப்பதி லட்டு விவகாரம்: திண்டுக்கல் நெய் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்