சரியாகப் பொருத்தப்படாத ரயில் தண்டவாளங்கள்: கோண்டா ரயில் விபத்து விசாரணை அறிக்கை

சரியாகப் பொருத்தப்படாத ரயில் தண்டவாளங்கள்: கோண்டா ரயில் விபத்து விசாரணை அறிக்கைசரியாகப் பொருத்தப்படாத ரயில் தண்டவாளங்களால் விபத்து நேரிட்டதாக கோண்டா ரயில் விபத்து விசாரணை அறிக்கை தெரிவிக்கிறது.ரயில் விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.-

உத்தரப் பிரதேச மாநிலம், கோண்டா அருகே சண்டீகா் – திப்ரூகா் விரைவு ரயில் தடம்புரண்ட விபத்தில், தண்டவாளங்கள் சரியாகப் பொருத்தப்படாததே காரணம் என்று, விசாரணைக்குழு தெரிவித்துள்ளது. ஆனால் இதற்கு ரயில்வே மறுப்புத் தெரிவித்துள்ளது.

மிக அவசரமாக கொடுக்கப்படும் அறிக்கை என்று ரயில்வே தெரிவிக்க, விசாரணைக் குழுவில் இருக்கும் உறுப்பினரும், குழுவின் அறிக்கையை ஏற்கவில்லை.

கோண்டா ரயில் விபத்தில் 4 பேர் பலியாகினர். காயமடைந்த 31 பேரில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கோண்டா மாவட்ட ஆட்சியா் நேஹா சா்மா தெரிவித்திருந்தார். விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய ரயில்வே தரப்பில் உயா்நிலை விசாரணை தொடங்கப்பட்டது. ரயில்வேயின் தொழில்நுட்பக் குழுவினா் ம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரித்தனா்.

ரயில் விபத்து நேரிட்ட இடத்தில், ரயில் தண்டவாளங்களைப் பொருத்தும் பணியானது சரியாக இல்லை, இதன் காரணமாக விபத்து நேரிட்டிருக்கலாம் என்று ஹிந்தியில் அளிக்கப்பட்டிருக்கும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வடகிழக்கு ரயில்வே மண்டல செய்தித் தொடர்பாளர் இது பற்றி கூறுகையில், விசாரணையின் துவக்கத்தில் அடிப்படையில்லாமல் கூறும் எந்த தகவலும் சரியால்ல என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் விசாரணை ஏற்கனவே தொடங்கிவிட்டது. இந்த விசாரணையானது, அனைத்து அடிப்படைக் காரணிகளையும் ஆராய்ந்து, தொழில்நுட்ப மற்றும் விபத்தின் முழு விவரங்களையும் விசாரிக்கும். மிக முக்கிய விஷயங்கள் எதுவும் கூட்டு விசாரணைக் குழுவினரின் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. விசாரணை மிகவும் ஆரம்பக்கட்டத்தில் உள்ளது எனறும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

உத்தர பிரதேசத்தின் கோண்டா சந்திப்பு ரயில் நிலையம் அருகே சண்டீகா் – திப்ரூகா் (அசாம்) விரைவு ரயில் வியாழக்கிழமை தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலின் 8 பெட்டிகள் தடம்புரண்டன.

விபத்து நடந்த இடத்தில் மறுசீரமைப்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. கவிழ்ந்த பெட்டிகளை கனரக இயந்திரங்கள் மூலம் அப்புறப்படுத்தும் பணி நடைபெறுகிறது. மறுநிா்மாணப் பணியில் சுமாா் 800 ஊழியா்கள் ஈடுபட்டனர்.

விபத்தில் உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயம் அடைந்தவா்களுக்கு தலா ரூ.2.5 லட்சமும், லேசான காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.50,000-ம் வழங்கப்படுமென என ரயில்வே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

பங்குச் சந்தை உயர்வு: 90 சதவீத சிறு முதலீட்டாளர்களுக்கு இழப்பு – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மராத்தா இடஒதுக்கீடு விவகாரம்: 8-வது நாளாக மனோஜ் ஜரங்கே உண்ணாவிரதம்.. உடல்நிலை பாதிப்பு

3 நாள் அமெரிக்க பயணம் நிறைவு: டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி