சரிவிலிருந்து மீண்ட சென்செக்ஸ், நிஃப்டி!

மும்பை: ப்ளூ சிப் நிறுவனங்களான ஐசிஐசிஐ வங்கி, ஹெச்.யு.எல் மற்றும் எச்டிஎஃப்சி வங்கி ஆகியவற்றின் உயர்வைத் தொடர்ந்து பெஞ்ச்மார்க் சென்செக்ஸ் இன்று 376 புள்ளிகள் உயர்ந்தது முடிந்தது.

இன்றைய வர்த்த முடிவில், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 375.61 புள்ளிகள் உயர்ந்து 81,559.54 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தக நேர துவக்கத்தில் சரிவை சந்தித்தத சென்செக்ஸ் 80,895.05 புள்ளிகள் வரை குறைந்த நிலையில், பிறகு மீண்டு 469.43 புள்ளிகள் வரை உயர்ந்து 81,653.36 புள்ளிகளை எட்டியது.

தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 84.25 புள்ளிகள் உயர்ந்து 24,936.40 புள்ளிகளில் நிலைபெற்றது. பேங்க் நிஃப்டி 1.03% புள்ளிகள் உயர்ந்து 51,097.25 புள்ளிகளில் முடிவடைந்தது. நிஃப்டி மிட்கேப் 100 ஆனது 83.40 புள்ளிகள் அதிகரித்து 58,418.55 ஆக முடிவடைந்தது.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள 30 பங்குகளில் ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐசிஐசிஐ வங்கி, ஐடிசி, கோடக் மஹிந்திரா வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் ஏற்றத்தில் முடிந்தது.

டெக் மஹிந்திரா, டாடா ஸ்டீல், என்டிபிசி, டாடா மோட்டார்ஸ், பவர் கிரிட் மற்றும் டைட்டன் பங்குகள் சரிந்து முடிந்தது.

ஆசிய சந்தைகளில் சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகியவை சரிந்து முடிந்தது. ஐரோப்பிய சந்தைகள் உயர்ந்து வர்த்தகமானது. அமெரிக்க சந்தைகள் (வெள்ளிக்கிழமையன்று) சரிந்து முடிந்தது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் வெள்ளிக்கிழமையன்று ரூ.620.95 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.13 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு 71.84 டாலராக உள்ளது.

கடந்த வாரம் வர்த்தக முடிவில் (வெள்ளிக்கிழமையன்று) மும்பை பங்குச் சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 1,017.23 புள்ளிகள் சரிந்து 81,183.93 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 292.95 புள்ளிகள் குறைந்து 24,852.15 புள்ளிகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

மேஷம் முதல் மீனம்: தினப்பலன்கள்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான சீசிங் ராஜா என்கவுன்டர்!

நாளைமுதல் 2 மண்டலங்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்