தொடர்ந்து இரண்டு நாள்கள் ஏற்றத்திற்குப் பின் பங்குச்சந்தை இன்று(நவ. 7) சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் இன்று காலை
80,563.42 என்ற புள்ளிகளில் தொடங்கியது.
பிற்பகல் 12.37 மணி நிலவரப்படி, செக்செக்ஸ் 756.12 புள்ளிகள் குறைந்து 79,622.01 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 261.20 புள்ளிகள் சரிந்து 24,222.85 புள்ளிகளில் உள்ளது.
இதையும் படிக்க | கன்னட பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட சூரியனார் கோவில் ஆதினம்!
ஊடகத் துறையைத் தவிர ஆட்டோமொபைல், வங்கி, உலோகம், ஐடி என மற்ற அனைத்துத் துறைகளும் சரிவை சந்தித்து வருகின்றன.
நிஃப்டி 50 -ல் அப்போலோ மருத்துவமனை, டாடா ஸ்டீல், கோல் இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபத்தையும்
ஹிண்டால்கோ, அதானி என்டர்பிரைசஸ், அல்ட்ராடெக் சிமெண்ட் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவையும் சந்தித்து வருகின்றன.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் எதிரொலியாக நேற்று உயர்வுடன் முடிந்த பங்குச்சந்தைகள் இன்று இறக்கம் கண்டு வருகின்றன.