சர்ஃபராஸ் கான் சதம்..! மழையினால் பெங்களூரு டெஸ்ட் போட்டி பாதிப்பு!

இந்தியா நியூசிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த அக்.16 அன்று பெங்களூரில் தொடங்கியது. முதல்நாள் மழையினால் பாதிக்க 2ஆம் நாளில் இந்தியா 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி 402 ரன்கள் குவித்தது. நியூசி. சார்பில் ரச்சின் ரவீந்திரா சதம் அடித்து அசத்தினார்.

3ஆம் நாள் இந்திய அணி 231/3 ரன்கள் எடுத்திருந்தது. தற்போது, 4ஆவது நாளில் பேட்டிங் செய்த இந்திய அணி உணவு இடைவேளை வரை 344/3 ரன்கள் எடுத்துள்ளது.

சர்ஃபராஸ் கான் 125 ரன்களுடனும் ரிஷப் பந்த் 53 ரன்களுடனும் விளையாடி வருகிறார்கள்.

மழையின் காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்கள் எடுத்தாலும் 2ஆவது இன்னிங்ஸில் வலுவாக விளையாடி வருகிறது. எளிதாக தோற்க வேண்டிய போட்டியினை டிராவை நோக்கி நகர்த்துகிறது இந்திய அணி.

Related posts

இரிடியம் தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி: 4 போ் கைது

முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!

ஜப்பான் ஆளுங்கட்சி தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு