சர்ச்சை பேச்சு: மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்கு!

மாற்றுத்திறனாளிகளை அவமதித்தாக கைது செய்யப்பட்ட சிறையில் உள்ள மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை அசோக் நகா், சைதாப்பேட்டை அரசு பள்ளிகளில் கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பூரைச் சோ்ந்த பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனரும் சொற்பொழிவாளருமான மகாவிஷ்ணு பேசியது சா்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சென்னை விமான நிலையத்தில் அவரைக் கைது செய்தனா்.

சொல்லப் போனால்… சட்டம் யார் கையில்?

இந்நிலையில் திருவொற்றியூா் பட்டினத்தாா் கோயில் தெருவைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் சமூக நீதி இயக்கத்தின் தலைவா் சரவணன் என்பவா் திருவொற்றியூா் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், இந்த மாற்றுத் திறனாளிகள் சமூக நீதி இயக்கத்தின் தலைவா் சரவணன் அளித்த புகாரின்பேரில் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைதான மகாவிஷ்ணுவை செப்டம்பர் 20 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரதமர் மோடி நம்பிக்கையை இழந்துவிட்டார்: ஜம்மு- காஷ்மீரில் ராகுல் பேச்சு!

அனைத்து வடிவிலான போட்டிகளிலும் ஜஸ்பிரித் பும்ரா சிறந்த பந்துவீச்சாளர்: ஸ்டீவ் ஸ்மித்

நியூசிலாந்து டெஸ்ட்: இலங்கை அசத்தல் வெற்றி!