சர்வதேச கிரிக்கெட்டில் 16 ஆண்டுகள் நிறைவு; விராட் கோலி குறித்து தினேஷ் கார்த்திக் நெகிழ்ச்சி பதிவு

சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடைய 16வது வருட பயணத்தை விராட் கோலி நிறைவு செய்துள்ளார்.

சென்னை,

இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி நவீன கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக போற்றப்படுகிறார். கடந்த 2008-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி கோப்பையை வென்று கொடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் குறுகிய காலத்திலேயே நிலையான இடத்தை பிடிக்கும் அளவுக்கு இந்தியாவின் மேட்ச் வின்னராக அவதரித்தார்.

அப்போதிலிருந்து உலகின் அனைத்து எதிரணிகளையும் பந்தாடி வரும் அவர் 26000+ ரன்களையும் 80 சதங்களையும் அடித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார். மூன்று வகையான கிரிக்கெட்டிலும் மாபெரும் பேட்ஸ்மேனாக பார்க்கப்படும் விராட் கோலி இன்றளவும் வளர்ந்து வரும் வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார். அதேபோல நிறைய வெளிநாட்டவர்களும் அவரை பின்பற்றுகின்றனர்.

இதனிடையே கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடைய 16வது வருட பயணத்தை விராட் கோலி நிறைவு செய்துள்ளார். இதையடுத்து விராட் கோலிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் விராட் கோலிக்கு வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். தினேஷ் கார்த்திக் வெளியிட்ட பதிவில், உங்களுடன் விளையாடியதில் மகிழ்ச்சி கேப்டன். 16 ஆண்டுகள் ஆகியும் தீ இன்னும் பிரகாசமாக எரிகிறது என பதிவிடப்பட்டுள்ளது.

Happy to have played with you Skipper
16 years and the fire still burns bright #16YearsOfViratKohlipic.twitter.com/7gJitDLIK8

— DK (@DineshKarthik) August 20, 2024

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா