சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விடைபெற்றார் வார்னர்!

சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விடைபெற்றார் வார்னர்!சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார் டேவிட் வார்னர்.டேவிட் வார்னர்படம் | ஏபி

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், தனது 15 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு டி20 சாம்பியனான ஆஸ்திரேலியா, வெறும் இரண்டு புள்ளிகளுடன் சூப்பர் 8 குரூப் 1 அட்டவணையில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. ஆப்கானிஸ்தானிடம் அதிர்ச்சி தோல்வியையும், இந்தியாவிடம் தோல்வியையும் சந்தித்து உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது.

37 வயதான டேவிட் வார்னர், ஜனவரி 2009 இல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமானார். ஜூன் 24 அன்று இந்தியாவுக்கு எதிரானப் போட்டியில் ஆஸ்திரேலியா 24 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதன் மூலம் அவரின் சர்வதேச கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

டேவிட் வார்னர் அர்ஷ்தீப் சிங்கின் பந்து வீச்சில் 6 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து சூரியகுமாரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

நவம்பர் 2023 இல் இந்தியாவுக்கு எதிரான உலகக் கோப்பை இறுதி ஆட்டத்திலும், ஜனவரியில் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்டிலும் அவர் தனது கடைசி போட்டியை விளையாடினார்.

இந்த டி20 உலகக் கோப்பை தனது இறுதிப் போட்டியாக இருக்கும் என்று அவர் நீண்ட காலமாக கூறிவந்தார்.

டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்காக 110 போட்டிகளில் 1 சதம் மற்றும் 28 அரைசதங்கள் உள்பட 33.43 சராசரி மற்றும் 142.47 ஸ்ட்ரைக் ரேட்டில் 3,277 ரன்கள் குவித்துள்ளார். 2011 முதல் 2024 வரை 112 டெஸ்ட் போட்டிகளில், 26 சதங்கள் மற்றும் 37 அரைசதங்களுடன் 44.59 சராசரியில் 8,786 ரன்கள் எடுத்துள்ளார். 161 ஒருநாள் போட்டிகளில் 45.30 சராசரியில் 22 சதங்கள் மற்றும் 33 அரை சதங்களுடன் 6,932 ரன்கள் எடுத்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் 49 சதங்களுடன் 19,000 க்கும் மேற்பட்ட ரன்களை குவித்த டேவிட் வார்னர், 2018 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது கேப்டவுன் நியூலேண்ட்ஸில் நடந்த டெஸ்டில் பந்தை சேதப்படுத்தியதால் அவருக்கு ஒரு ஆட்டத்தில் விளையாட தடைவிதிக்கப்பட்டது.

நியூலேண்ட்ஸ் டெஸ்டின் போது, ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பான்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்தியதால் ​​வார்னருக்கும், அப்போதைய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்துக்கு சர்வதேசப் போட்டிகளில் விளையாட ஓராண்டு தடை விதிக்கப்பட்டது.

இதுகுறித்து டேவிட் வார்னர் கூறுகையில், “ இன்னும் 20 அல்லது 30 ஆண்டுகளுக்கு மக்கள் என்னைப் பற்றி பேசும்போது, ​​​​அந்த மணல் காகித விவகாரம் தவிர்க்க முடியாதது என்று நான் நினைக்கிறேன். ஆனால், என்னைப் பொறுத்தவரை, உண்மையான கிரிக்கெட்டை நேசிக்கும் ரசிகர்கள் என்னை ஒரு சாதாரண கிரிக்கெட் வீரராகவும், கிரிக்கெட்டில் ஒரு தவறானவனாகவும்தான் பார்ப்பார்கள்” என்றார்.

டேவிட் வார்னர் 2014 முதல் 2021 ஆம் ஆண்டு வரை ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக பதவி வகித்தார். மேலும், 2016 ஆம் ஆண்டில் ஹைதராபாத் அணி பட்டம் வெல்வதற்கு முக்கிய காரணமாக வார்னர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்தியா-ஜப்பானின் வலிமையான உறவுகள், உலகளாவிய வளத்திற்கு சிறந்தவை: பிரதமர் மோடி

அரசியலுக்கு பணம் சம்பாதிக்க வரவில்லை: கெஜ்ரிவால் பேச்சு

திருப்பதி லட்டு விவகாரத்திற்காக பரிகாரம் – 11 நாட்கள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்