சர்வதேச டி20 போட்டிகளில் டிராவிஸ் ஹெட் புதிய சாதனை!

டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்காக ஓராண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை டிராவிஸ் ஹெட் படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன் மூலம், டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.

லியம் லிவிங்ஸ்டனுக்கு பில் சால்ட் புகழாரம்!

டிராவிஸ் ஹெட் புதிய சாதனை

முதல் டி20 போட்டியில் அதிரடியாக அரைசதம் விளாசி ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி பெற்றுத் தந்த டிராவிஸ் ஹெட், இரண்டாவது போட்டியிலும் தனது அதிரடியான ஆட்டத்தைத் தொடர்ந்தார். இரண்டாவது டி20 போட்டியில் டிராவிஸ் ஹெட் 14 பந்துகளில் அதிரடியாக 31 ரன்கள் குவித்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

இரண்டாவது டி20 போட்டியில் இரண்டு சிக்ஸர்கள் அடித்ததன் மூலம், டிராவிஸ் ஹெட் ஆஸ்திரேலிய அணிக்காக ஓராண்டில் டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரராக மாறி சாதனை படைத்துள்ளார். அவர் இந்த ஆண்டில் மட்டும் சர்வதேச டி20 போட்டிகளில் 33 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். இதற்கு முன்னதாக, கடந்த 2018 ஆம் ஆண்டு ஆரோன் ஃபின்ச் டி20 போட்டிகளில் 31 சிக்ஸர்கள் அடித்திருந்ததே ஆஸ்திரேலிய அணி வீரர் ஒருவர் அடித்த அதிகபட்ச சிக்ஸர்களாக இருந்தது.

இந்திய அணியில் பெரிய மாற்றங்கள் தேவையில்லை: பந்துவீச்சு பயிற்சியாளர்

இந்த ஆண்டில்…

இந்த ஆண்டு15 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள டிராவிஸ் ஹெட், இதுவரை 539 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 38.50 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 178.47 ஆகவும் உள்ளது. இந்த ஆண்டில் டி20 போட்டிகளில் அவர் குவித்த அதிகபட்ச ஸ்கோர் 80 என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று மாலை ஜார்க்கண்ட் செல்கிறார் அமித் ஷா!

தில்லி முதல்வராக அதிஷி செப்.21-ல் பதவியேற்பு!

தனியார் உணவத்தில் அரசு முத்திரையிட்ட சத்துணவு முட்டைகள் எப்படி? – துறையூரில் பரபரப்பு