சலூன் கடைக்காரரிடம் உரையாடும் ராகுலின் விடியோ வைரல்!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஒரு சலூன் கடையில் சவரம் செய்யும்போது கடைக்காரரான அஜித்துடன் உரையாடல் குறித்த விடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விடியோவில் “நாள் முழுவதும் உழைத்தாலும், நாளின் இறுதியில் சேமிக்கக்கூடிய வகையில் எதுவும் மிஞ்சவில்லை’’ என்று ராகுலிடம் அஜித் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

ராகுல் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது, “அஜித் கூறிய `எதுவும் மிச்சமில்லை’ என்ற வார்த்தைகளும், அவரது நம்பிக்கைகளும் இந்தியாவில் உழைக்கும் ஒவ்வொரு ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் நிலைமையை எடுத்துரைக்கின்றன.

"कुछ नहीं बचता है!"
अजीत भाई के ये चार शब्द और उनके आसूं आज भारत के हर मेहनतकश गरीब और मध्यमवर्गीय की कहानी बयां कर रहे हैं।
नाई से लेकर मोची, कुम्हार से लेकर बढ़ई – घटती आमदनी और बढ़ती महंगाई ने हाथ से काम करने वालों से अपनी दुकान, अपना मकान और स्वाभिमान तक के अरमान छीन लिए… pic.twitter.com/1gYGdui2ll

— Rahul Gandhi (@RahulGandhi) October 25, 2024

முடி திருத்துபவர்கள் முதல் செருப்பு தைக்கும் தொழிலாளர்கள், குயவர்கள், தச்சர்கள் வரையிலான தொழிலாளர்களின் கடை, வீடு மற்றும் சுயமரியாதையை, இந்தியாவின் வீழ்ச்சியடைந்த வருமானம் மற்றும் பணவீக்க அதிகரிப்புதான் கொள்ளையடித்துள்ளன.

தொழிலாளர்களின் வருமானத்தை அதிகரிக்கும் மற்றும் குடும்பங்களுக்கு சேமிப்பை மீண்டும் கொண்டு வரும் புதிய திட்டங்களும் நவீன தீர்வுகளும்தான் இன்று தேவை’’ என்று கூறியுள்ளார்.

இதையும் படிக்க:திராவிடநல் திருநாடு என்று சொன்னால் உங்கள் நாக்கு தீட்டாகிவிடுமா?

Related posts

சிஎஸ்கே இந்த 5 வீரர்களை தக்கவைக்கும்: ஹர்பஜன் சிங்

திராவிடநல் திருநாடு என்று சொன்னால் உங்கள் நாக்கு தீட்டாகிவிடுமா?

அஸ்ஸாமில் அரசுத் தேர்வால் இணைய சேவை முடக்கம்!