சல்மான்கான் – ராஷ்மிகா நடிக்கும் ‘சிக்கந்தர்’ படத்தின் அப்டேட்

சல்மான்கான் – ராஷ்மிகா நடிக்கும் ‛சிக்கந்தர்' படத்தின் படப்பிடிப்பு ஜூன் 18 -ம் தேதி தொடங்குகிறது.

சென்னை,

ஏ.ஆர்.முருகதாஸ் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு பிறகு பாலிவுட் நடிகர் சல்மான்கானை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் புதிய இந்தி படம் இயக்குகிறார். இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இது "புராணக் கதை' படமாகும். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரிக்கிறார். மேலும் சல்மான்கான் 10 ஆண்டுகளுக்கு பிறகு தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலாவுடன் இணைந்து உள்ளார்.

ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிக்க உள்ள புதிய படத்துக்கு 'சிக்கந்தர்' எனும் 'பெயர் ' வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாகும் எனவும் சல்மான்கான் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

#NGEFamily is super excited to share the date of our first day of shoot for #Sikandar on the 18th of June with the BIGGEST Air Action sequence! ♥️ #SajidNadiadwala’s #Sikandar
Directed by @ARMurugadoss@BeingSalmanKhan@iamRashmika@WardaNadiadwala#SikandarEid2025pic.twitter.com/Ph8Ms1hq7s

— Nadiadwala Grandson (@NGEMovies) June 10, 2024

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் 18 -ம் தேதி தொடங்குகிறது என்று அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Original Article

Related posts

சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வேட்டையன்: பகத் பாசிலின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு

எமர்ஜென்சி ரிலீஸ்: தணிக்கை வாரியத்துக்கு கெடு விதித்த மும்பை உயர்நீதிமன்றம்!