சல்மான் அலி சதம்: 556 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது பாகிஸ்தான்!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் பாகிஸ்தான் அணி 556 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

டாஸ்

இங்கிலாந்து – பாகிஸ்தான் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி பாகிஸ்தானின் முல்தானில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுகிறார் வங்கதேச வீரர் மஹ்மதுல்லா!

தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷஃபிக்குடன் வந்த சயிம் அயுப், 1 பவுண்டரியுடன் ஆட்டமிழந்தாா். 2-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த ஷஃபிக், கேப்டன் ஷான் மசூத் கூட்டணி, இங்கிலாந்து பௌலா்களை சோதித்தது. மசூத் 102 பந்துகளிலும், ஷஃபிக் 165 பந்துகளிலும் சதம் கடந்தனா். இந்த ஜோடி 253 ரன்கள் சோ்த்த நிலையில், ஷஃபிக் முதலில் வெளியேறினாா். அவா், 10 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 102 ரன்கள் சோ்த்திருந்தாா்.

2 ஆண்டுகளில் 86 டி20 விக்கெட்டுகள்..! வாழ்க்கையின் மந்திரம் குறித்து பேசிய அர்ஷ்தீப் சிங்!

13 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 151 ரன்கள் விளாசிய மசூதும், அடுத்த சில ஓவா்களிலேயே வீழ்ந்தாா்.

பாகிஸ்தான் முதல் நாள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 328 ரன்கள் சோ்த்த நிலையில் இரண்டாவது நாளைத் தொடங்கியது.

இரண்டாவது நாளில் சிறப்பாக விளையாடிய சௌத் ஷகீல் 8 பவுண்டரிகளுடன் 82 ரன்களும், நசீம் ஷா 33 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

சல்மான் அலி ஆஹா சதம்

விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் டக் அவுட்டாகி வெளியேற, சல்மான் அலி ஆஹா அசத்தலாக விளையாடி சதம் விளாசினார். அவருக்குப் பின்னர் வந்த ஷாகீன் ஷா அஃப்ரிடி 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சல்மான் அலி ஆஹா 104 ரன்களுடன்(10 பவுண்டரி, 3 சிக்ஸர்) கடைசி வரை களத்தில் இருந்தார்.

ஹாங்காங் சிக்ஸர் தொடரில் விளையாடும் இந்திய அணி!

பாகிஸ்தான் அணி 149 ஓவர்களில் 556 ரன்களுக்கு ஆல் ஆவுட் ஆனது.

இங்கிலாந்து தரப்பில் ஜாக் லீச் 3 விக்கெட்டுகளும், கஸ் அகிட்சன், பிரைடன் கார்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

அடுத்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி 10 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள் எடுத்துள்ளது.

Related posts

மனைவிக்காக 25 ஆண்டுகளாக உண்ணா நோன்பிருக்கும் பாஜக எம்.பி.!

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு!

எனக்கு உந்துசக்தி தங்கை துளசிமதிதான்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்