சாம்பியன்ஸ் டிராபி: பாகிஸ்தான் செல்ல பிசிசிஐ மறுப்பு!

சாம்பியன்ஸ் டிராபிக்கான தொடருக்கு பாகிஸ்தானுக்குச் செல்ல இந்திய கிரிக்கெட் கவுன்சில் மறுப்பு தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

சாம்பியன்ஸ் டிராபி போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் மார்ச் 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தொடரின் போட்டிகளை பாகிஸ்தானின் கராச்சி, லாகூர் மற்றும் ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் நடத்தப்படவுள்ளது.

தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு 16 ஆண்டுகளாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லவில்லை.

இதனால், பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்றாலும், இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் நடத்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Related posts

சதம் விளாசிய சஞ்சு சாம்சன்; தென்னாப்பிரிக்காவுக்கு 203 ரன்கள் இலக்கு!

தமிழக தலைமைத் தேர்தல் அலுவலராக அர்ச்சனா பட்நாயக் நியமனம்!

இன்னும் பல வெற்றிகள் காத்திருக்கு… முகமது ரிஸ்வானை பாராட்டிய முன்னாள் கேப்டன்!