சாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்த ஆம்னி கார்!

காட்பாடி அருகே ஆம்னி கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கசம் பகுதியை சேர்ந்தவர் மளிகைக் கடை நடத்தி வரும் சிவராமன் (43). இவர் தனது ஆம்னி காரில் மளிகைக் கடைக்கு தேவையான பொருள்கள் வாங்க, கசம் பகுதியில் இருந்து சேர்காடு நோக்கி சென்றுள்ளார்.

அப்போது, கண்டிப்பேடு அருகே சென்றபோது காரில் இருந்து லேசாக புகை வந்துள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு அதிகரிக்கும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

இதனை அறிந்த சிவராமன் வேகமாக காரில் இருந்து இறங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து, கார் தீப்பிடித்து எரியத் தொடங்கி முழுவதுமாக எரிந்து நாசமாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காட்பாடி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.

இதுகுறித்து திருவலம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெட்ரோல் மூலம் இயங்கும் ஆம்னி காரின் பேட்டரி பகுதியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related posts

செவிலியர்களை கௌரவிக்கும் சிபாகா மிஸ் நைட்டிங்கேல் விருது!

புதிய உச்சத்துக்குப் பிறகு சரிவுடன் முடிந்த சென்செக்ஸ்!

ஒரு பக்கம் விரதம்..! மறுபக்கம் படப்பிடிப்பு..! பவன் கல்யாணின் படப்பிடிப்பு துவக்கம்!