சாலை விபத்தில் சிக்கிய இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!

இந்திய அணி வீரர்களில் ஒருவரான சர்ஃபராஸ் கானின் சகோதரர் முஷீர் கான் சாலை விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளார்.

அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கவுள்ள இரானி கோப்பையில் விளையாடுவதற்காக ஆஸம்கார்கிலிருந்து லக்னௌவுக்கு காரில் சென்றுகொண்டிருந்தபோது, இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பூர்வஞ்சால் விரைவுச்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, கார் சாலை நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் முஷீர் கானுக்கு கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தின்போது, முஷீர் கானுடன் காரில் பயணித்த அவரது தந்தை நௌஷத் கானுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேமரூன் கிரீன் விளையாடுவது சந்தேகம்!

3 மாதங்கள் ஆகலாம்

முஷீர் கானுக்கு கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் குறைந்தது 3 மாதத்துக்கு கிரிக்கெட் விளையாட முடியாது எனக் கூறப்படுகிறது. இதன் மூலம், வருகிற அக்டோபர் 11 முதல் தொடங்கவுள்ள 2024-25 ஆம் ஆண்டுக்கான ரஞ்சி கோப்பை தொடரில் அவரால் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

மருத்துவர்கள் கூறுவதென்ன?

விபத்தில் காயமடைந்த முஷீர் கான் லக்னௌவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முஷீர் கான் குறித்து அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கூறியதாவது: முஷீர் கானுக்கு பயப்படும் விதமாக ஆபத்து ஒன்றுமில்லை. அவர் நன்றாக இருக்கிறார். அவரது உடல்நிலையை நாங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறோம் என்றார்.

டான் பிராட்மேனின் சாதனையை சமன் செய்த கமிந்து மெண்டிஸ்!

உள்ளூர் போட்டிகளில் முஷீர் கான் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு இந்திய அணியின் இளம் வீரரான ரிஷப் பந்த் இதே போன்று பயங்கர கார் விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

Related posts

திருவாரூரில், 50 மெகா வாட் திறனில் முதல் சூரியசக்தி மின்சார நிலையம்

Actor Rajinikanth, 73, has been admitted to Apollo Hospitals

National Testing Agency Set To Announce Results For UGC NET June 2024; Steps To View