சென்னை: 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் மீண்டும் எம்.எஸ்.தோனி விளையாடுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியை ரூ.4 கோடிக்கு தக்கவைத்துள்ளது.
2025 ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎஸ் போட்டியில் சென்னை அணிக்காக மீண்டும் விளையாடுகிறார் தோனி என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
ருத்துராஜ் கெய்க்வாட், பதிரனா, ஷிவம் துபே, ஜடேஜா ஆகியோர் சிஎஸ்கே அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
ருத்துராஜ் ரூ.18 கோடிக்கும், ஜடேஜா ரூ.18 கோடி, பதிரனா ரூ.13 கோடி, துபே ரூ.12 கோடிக்கு தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
கொல்கத்தா மற்ரும் ராஜஸ்தான் இரு அணிகளும் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்கவைத்துள்ளது.
பஞ்சாப் அணி 2 வீரர்களையும் பெங்களூரு அணி 3 வீரர்களையும் தக்கவைத்துள்ளது.
சென்னை, தில்லி, லக்னௌ, குஜராத், மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் 5 வீரர்களை தக்கவைத்துள்ளது.
மும்பை அணியில் ரோகித் சர்மா, பும்ரா, சூரியகுமார் யாதவ், ஹர்திக், திலக் வர்மா ஆகியோர் தொடர்கின்றனர்.
ரூ.21 கோடிக்கு விராட் கோலி
அணிகள் தக்கவைத்த இந்திய வீரர்களில் அதிக தொகையுடன் பெங்களூரு அணி ரூ.21 கோடிக்கு விராட் கோலியை தக்கவைத்துள்ளது.
அணிகளில் இருந்து விடுக்கப்பட்ட வீரர்கள்
கடந்த 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கேப்டன்களாக செயல்பட்ட கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய வீரர்கள் தங்களது அணிகளில் இருந்து விடுவிப்பு.
லக்னௌ, தில்லி, கொல்கத்தா ஆகிய 3 அணிகளுக்கு புதிய கேப்டன்கள் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.