சிகாகோ சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின்!

அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை காலை சிகாகோ நகருக்கு சென்றடைந்தார்.

சிகாகோ விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி ஆரத்தி எடுத்து அமெரிக்க வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முதல்வருடன் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் அரசு அதிகாரிகள் சென்றுள்ளனர்.

சிகாகோவில் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

சான்பிரான்சிஸ்கோ பயணம்

தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்காக 17 நாள்கள் பயணமாக கடந்த வாரம் அமெரிக்காவுக்கு சென்றார் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

முதலில், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு ஆகஸ்ட் 28-ஆம் தேதி சென்ற முதல்வர் ஸ்டாலின், முதலீட்டாளர்கள் மாநாடு, அமெரிக்க வாழ் தமிழர்களுடன் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

அமெரிக்கவாழ் தமிழா்களுக்கு முதல்வா் ஸ்டாலின் நன்றி

இந்த பயணத்தில், 4,600 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், எட்டு நிறுவனங்களுடன் ரூ.1,300 கோடி முதலீட்டுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் முதல்வா் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, சிகாகோ நகருக்கு இன்று பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்களை சந்தித்துப் பேசவுள்ளார்.

இந்த பயணத்தை முடித்துக் கொண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி சென்னை திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின்.

Related posts

செவிலியர்களை கௌரவிக்கும் சிபாகா மிஸ் நைட்டிங்கேல் விருது!

புதிய உச்சத்துக்குப் பிறகு சரிவுடன் முடிந்த சென்செக்ஸ்!

ஒரு பக்கம் விரதம்..! மறுபக்கம் படப்பிடிப்பு..! பவன் கல்யாணின் படப்பிடிப்பு துவக்கம்!