சிக்சருக்கு பறந்த பந்து… சிறுவர்கள்போல் தேடி கண்டுபிடித்த விராட் கோலி.. வீடியோ வைரல்

வங்காளதேச வீரர் அடித்த பந்து ஒன்று சிக்சர் செல்ல அதனை விராட் கோலியே உருண்டு தேடி கண்டுபிடித்தார்.

ஆன்டிகுவா,

டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் ஆன்டிகுவாவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில்'டாஸ்' வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளுக்கு 196 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 50 ரன்கள் அடித்தார். வங்காளதேசம் தரப்பில் தன்சிம் ஹசன் சகிப், ரிஷாத் ஹூசைன் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்காளதேச அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தன. 20 ஓவர்கள் முடிவில் வங்காளதேச அணி 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன்களே எடுத்தது. இதனால் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும், பும்ரா, அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்ட்யா ஒரு விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர்.

அப்போது ஆட்டத்தின் 17 புள்ளி இரண்டாவது ஓவரில் அக்சர் பட்டேல் வீசிய பந்தை ரிஷாத் ஹூசைன் சிக்சர் அடித்தார். அப்போது அந்த பந்து நேரடியாக பார்வையாளர்கள் மாடத்திற்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரும்பு பலகையின் கீழ் சென்றது.

இதை பார்த்த விராட் கோலி பந்தை எடுத்துக் கொடுக்கும் பால் பாய்ஸ் வரும் வரை தாமதிக்காமல் அவரே நேராக சென்று படுத்து உருண்டு பந்தை தேடி கையில் எடுத்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Virat Kohli searching for the ball ❤pic.twitter.com/tiSXqd7k0e

— Ram Garapati (@srk0804) June 22, 2024

Related posts

மகளிர் டி20 உலகக்கோப்பை: இலங்கை அணி அறிவிப்பு

மகளிர் டி20 கிரிக்கெட்; லிட்ச்பீல்ட் அபாரம்… நியூசிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா

சச்சினின் மாபெரும் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்த விராட் கோலி