சிங்கப்பூருடனான நட்புறவை இந்தியா கொண்டாடுகிறது -பிரதமர் மோடி

அரசு முறைப் பயணமாக புரூனே சென்ற பிரதமர் நரேந்திர மோடி, புரூனே பயணத்தை முடித்துக் கொண்டு இன்று(செப். 4) சிங்கப்பூர் சென்றடைந்தார்.

சிங்கப்பூரில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. இந்திய பாரம்பரியத்தை பறைசாற்றும் இசை, நடனம் என சிங்கப்பூர் வாழ் இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அப்போது, சிங்கப்பூரில் உள்ள இந்தியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியதுடன், கொட்டு மேளத்தையும் அடித்து அவர்களை உற்சாகப்படுத்தினார்.

இந்த நிலையில், தனது சிங்கப்பூர் பயணம் குறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, “எனது நண்பர், சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங்கை சந்திப்பதில் மகிழ்ச்சி. பலதரப்பட்ட விஷயங்களில் விரிவான ஆலோசனை நடத்தியுள்ளோம். சிங்கப்பூருடனான நட்புறவை இந்தியா கொண்டாடுகிறது” எனப் பதிவிட்டுள்ளார்.

Happy to have met my friend, PM Lawrence Wong. Had an excellent discussion on a wide range of issues. India cherishes the friendship with Singapore. https://t.co/ZLpZME0rxu

— Narendra Modi (@narendramodi) September 4, 2024

Related posts

கேரள நபருக்கு புதிய வகை குரங்கு அம்மை: நாட்டில் முதல் முறை; கண்காணிப்பு தீவிரம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 492-ஆக உயர்வு!

சென்னை உள்பட தமிழகத்தில் 14 இடங்களில் என்ஐஏ சோதனை