சிங்கப்பூர் செல்லும் மோடி!

பிரதமர் மோடி அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் சிங்கப்பூர் செல்லவிருப்பதாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் வாராந்திர ஊடக மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பேசியதாவது, “சுல்தான் ஹாஜி ஹசானல் போல்கியாவின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி செப்டம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் புருனே தாருஸ்ஸலாமிற்கு பயணம் செய்யவுள்ளார்.

இந்தியாவிற்கும் புருனேவிற்கும் இடையிலான தூதரக உறவுகள் நிறுவப்பட்ட 40 ஆவது ஆண்டு நிறைவுடன் இந்த பயணம் ஒத்துப்போகிறது.

தலித் நபரின் நிலை உங்களுக்கு எப்படித் தெரியும்? : கங்கனாவிடம் காங்கிரஸ் தலைவர் கேள்வி

இதனைத் தொடர்ந்து, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் அழைப்பின் பேரில், புருனேயில் இருந்து பிரதமர் மோடி செப்டம்பர் 4, 5 ஆகிய தேதிகளில் சிங்கப்பூருக்கும் பயணம் மேற்கொள்கிறார்.

இந்த பயணத்தின்போது, பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன’’ என்று தெரிவித்தார்.

Related posts

திரைப்பட இயக்குனர் மோகனை கைது செய்வதா? – டாக்டர் ராமதாஸ் கண்டனம்

உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

‘தமிழக அமைச்சரவையில் மாற்றம்…’ – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்