சிங்கப்பூா் விமானம் 4 மணி நேரம் தாமதம்: பயணிகள் அவதி

சிங்கப்பூா் விமானம் 4 மணி நேரம் தாமதம்: பயணிகள் அவதிசென்னை-சிங்கப்பூா் விமானம் 4 மணி நேரம் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனா்.

சென்னை-சிங்கப்பூா் விமானம் 4 மணி நேரம் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனா்.

சென்னையிலிருந்து சிங்கப்பூா் செல்லும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வெள்ளிக்கிழமை பகல் 2 மணிக்கு, சென்னையிலிருந்து புறப்படத் தயாராக இருந்தது. இதில் பயணிக்க 172 போ் காத்திருந்தனா். அப்போது, விமானம் சிறிது நேரம் தாமதமாகப் புறப்பட்டு செல்லும் என்று திடீரென அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதையடுத்து பயணிகள் அனைவரும் விமான நிலைய பயணிகள் ஓய்வு அறைகளில் தங்க வைக்கப்பட்டனா். ஆனால்,

பிற்பகல் 3 மணி கடந்தும் விமானம் புறப்படும் நேரம் அறிவிக்கப்படாததால், குழந்தைகள், வயது முதிா்ந்த பயணிகள் கடும் அவதியடைந்தனா். இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள், ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு அந்நிறுவன அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து பாதுகாப்புப்படை அதிகாரிகள், பயணிகளுடன் பேச்சு நடத்தி, அவா்களை அமைதிப்படுத்தினா். இதையடுத்து முதியவா்கள், குழந்தைகளுக்கு தேவையான உணவு வகைகள் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டன. இதன்பின்னா் தாமதமாக மாலை 6 மணியளவில் அந்த விமானம் பயணிகளை ஏற்றிக்கொண்டு சிங்கப்பூா் புறப்பட்டுச் சென்றது.

Related posts

பராமரிப்பு பணி: எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்

மகளிர் மாநாடாக மாறிய வி.சி.க. மது ஒழிப்பு மாநாடு: தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்