சிங்கார சென்னை அட்டையை இனி எளிமையாக பெறலாம் – மெட்ரோ நிர்வாகம் தகவல்

சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு மெட்ரோ ரெயில் நிறுவனம் 20 சதவீத தள்ளுபடி வழங்குகிறது.

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சிங்கார சென்னை அட்டை பெறுவதை எளிமையாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மெட்ரோ பயணிகளின் வசதியை மேம்படுத்த தொடர்ந்து பல்வேறு வகையான பயண சலுகைகளை வழங்கி வருகிறது. ஏப்ரல் 14 ,2023 அன்று அறிமுகமான சிங்கார சென்னை அட்டை மெட்ரோ பயணிகளிடம் பெரிதும் வரவேற்கப்பட்டது. இதுவரை மொத்தம் 3.89 லட்சம் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு முன் இந்த சிங்கார சென்னை அட்டை பெறுவதற்கு பயணிகளிடம் KYC சரிபார்ப்பு பதிவு தேவைப்பட்டிருந்தது. இதனை மேலும் பயணிகளின் வசதிக்காக KYC சரிபார்ப்பு இல்லாமல் மாற்றப்பட்டுள்ளது, பயணிகள் தங்கள் கைபேசி எண்ணை வழங்கி ஒரு முறை கடவுச்சொல் (OTP) மூலம் உறுதிப்படுத்தினால், உடனுக்குடன் மெட்ரோ நிலையங்களில் சிங்கார சென்னை அட்டையை பெற்றுக் கொள்ளலாம். இப்புதிய வசதி இன்று (30.10.2024) முதல் பயணிகள் பயன்படுத்திக்கொள்ளலாம். அதனுடன் 20% தள்ளுபடியும் உண்டு.

சிங்கார சென்னை அட்டை சென்னை மெட்ரோ அல்லது பிற மெட்ரோக்களிலும் பயணத்தை எளிதாக்குவதோடு, மெட்ரோ நிலைய வாகன நிறுத்த கட்டணத்தை செலுத்தவும் உதவுகிறது. பயணிகளுக்கு விரைவான, எளிதான அனுபவத்தை சென்னை மெட்ரோ தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது, மற்றும் பயணச்சீட்டு பெறும் முறைகளை பயணிகளின் வசதிக்காகவும் மாற்றி வருகிறது.

மேலும், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு கியுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட், Paytm App மற்றும் PhonePe போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்று கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Bureau Of Civil Aviation Security (BCAS) Grants Exemption To Sabarimala Pilgrims, Allowing Them To Carry Coconuts On Flights For Temple Rituals During Mandala Season

தாம்பரம் – நாகர்கோவில், மங்களூரு ரயில்கள் தாமதமாகப் புறப்படும்!

தீபாவளி: அரசுப் பேருந்துகளில் 1.50 லட்சம் பேர் பயணம்!