சிங்க்ஃபீல்டு கோப்பையை வென்றார் அலிரெஸா ஃபிரௌஸ்ஜா! பிரக்ஞானந்தாவுக்கு பரிசுத்தொகை எவ்வளவு?

கிராண்ட் செஸ் டூரின் ஒரு பகுதியாக நடைபெறும் சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் கோப்பியை வென்றார் பிரான்ஸின் அலிரெஸா ஃபிரௌஸ்ஜா.

அமெரிக்காவில் நடைபெற்று வந்த இந்தப் போட்டியின் கடைசி சுற்றில் பிரான்ஸின் அலிரெஸா ஃபிரௌஸ்ஜா பிரக்ஞானந்தாவுடன் மோதினார். இந்தப் போட்டி டிராவில் முடிவடைந்தது. மற்றுமொரு இந்தியரான குகேஷும் டிரா செய்தார்.

இறுதியாக புள்ளிப் பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார் பிரான்ஸின் அலிரெஸா ஃபிரௌஸ்ஜா.

40 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரில் கிரிக்கெட் போட்டி!

அமெரிக்காவின் ஃபாபியானோ கரானா 5.5 புள்ளிகளுடன் 2ஆம் இடம் பிடித்தார். 4ஆம் இடத்தை பிரக்ஞானந்தா, குகேஷ், வெஸ்லி சோ ஆகியோர் பகிர்ந்துகொண்டனர்.

முதலிடம் பிடித்த அலிரெஸா ஃபிரௌஸ்ஜாவுக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.83 லட்சம்) பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

இந்தியர்களான பிரக்ஞானந்தா, குகேஷுக்கு தலா ரூ.18 லட்சம் பரிசுத் தொகையாக கொடுக்கப்பட்டுள்ளது.

Final standings of the #SinquefieldCup and the #GrandChessTour! pic.twitter.com/DhXJD5Rvfz

— Grand Chess Tour (@GrandChessTour) August 28, 2024

Related posts

மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி மறுப்பா ? த.வெ.க. விளக்கம்

தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகள் முன்பு விரைவில் முற்றுகை போராட்டம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு